#BREAKING : மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி..? கமல் எடுத்த முடிவு..!
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் பணிகளில் மக்கள் நீதி மய்யம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதையொட்டி, அவசர செயற்குழு, பொதுக் குழு கூட்டத்துக்கு மநீம சார்பில் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். மக்களவை தேர்தல், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தல்களை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும், மக்களவைத் தேர்தல் கூட்டணி, கட்சி வளர்ச்சி குறித்தும் நிர்வாகிகளுக்கு கமல் ஹாசன் ஆலோசனை வழங்கினார்.
அப்போது, தேர்தல் கூட்டணி குறித்து, பல்வேறு கட்சிகள் பேசி வருவதாகவும், கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் நிர்வாகிகளிடம் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி, கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தமிழக மநீம செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார். மேலும் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க இருப்பதாக கமல் எச்சரித்தார். பின்னர், கூட்டணியமைத்தாலும் அனைத்து பூத்களிலும் மநீம பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.