#BREAKING : முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி..!
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாக பொருளாளர் அஜய் மக்கான் கூறியுள்ளது தேசிய அளவில் பரபரப்பை கிளப்பியது. காங்கிரஸ் கட்சி, மகளிரணி, மாணவர் அணி ஆகியவற்றின் வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளனர். மேலும் வருமான வரித்துறை நடவடிக்கையில் விடுபடுவதற்கு 210 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. Crowd Funding முறையில் பெறப்பட்ட நிதியையும் முடக்கிவிட்டனர்.
தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் எதிர்க்கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியிருப்பது ஜனநாயகத்தை முடக்கும் செயல் என்று அஜய் மக்கான் கடுமையாக சாடியுள்ளார்.
இந்நிலையில், வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இந்த முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம் வங்கி கணக்கு முடக்கத்துக்கு தற்காலிகமாக விலக்கு வழங்கி உத்தரவிட்டது.இதன்மூலம் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை மீண்டும் பயன்படுத்த காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது.