#BREAKING :சென்னையில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னையில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தகவலறிந்து பெற்றோர்கள் பள்ளிகளில் குவிந்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை பப்ளிக் பள்ளி, கோபாலபுரம் டிஏவி பள்ளி, கே.கே. நகர் பத்ம சேஷாத்ரி, பாரிமுனையில் செயிண்ட் மேரீஸ் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே ஐபி முகவரியில் இருந்து மேற்கண்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களை பெற்றோர் அழைத்து செல்லுமாறு எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப், போன் மூலம் கேட்டுக் கொண்டனர்.