#BREAKING : சிலிண்டர் விலை உயர்வு..!
இன்று (மார்ச் 1) வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.23.50 உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று வரை ரூ.1,937க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக கேஸ் சிலிண்டர்கள், இன்று முதல் ரூ.1,960.50க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.918.50 என்று விற்பனை ஆகிறது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்தப்பட்டுள்ளதால் டீ கடை, ஓட்டல் நடத்துபவர்கள் உள்ளிட்ட வணிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.