#BREAKING : தனியார் கோவில்களில் நேரலை – உயர்நீதிமன்றம் உத்தரவு..!
ராமர் கோயில் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், அதனை பொது இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக பாஜகவினர் நேற்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதனை அவசர வழக்காக விசாரிக்க இருக்கிறது சுப்ரீம் கோர்ட்.
இந்நிலையில் ராமர் கோயில் திறப்பை நேரலை செய்ய செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் நேரலைக்கு போலீசார் தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனியார் கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை செய்ய அனுமதி தேவையில்லை என்றும், அறநிலையத்துறையின் கோயில்களில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் கோவில்களில் நேரலையில் ஒளிபரப்ப போலீசாரின் அனுமதி பெறத் தேவையில்லை என்றும் அறநிலையத்துறை கோவில்களில் நேரலையில் ஒளிபரப்ப கோவில் செயல் அலுவலரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.