#BREAKING : ஏப்.13 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை..!
தமிழகத்தில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படுகின்றன.
இந்நிலையில், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்.12ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து, ஏப். 13ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது.