”மார்பக புற்றுநோய்.. காரில் அழுவேன்..” சோகத்தை பகிர்ந்த எதிர்நீச்சல் நாயகி கனிகா!

தமிழக மக்களிடையே டிவி தொடர்கள் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. சிறுசு முதல் பெருசு வரை அனைவரும் டிவியின் முன் தங்களுக்கு பிடித்த சீரியலை பார்க்க சரியான நேரத்திற்கு ஆஜராகி விடுகிறாரகள். அந்த அளவுக்கு சீரியல் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சில சீரியல்களுக்கு ரசிகர்கள் மிகவும் அதிகம். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

விறுவிறுப்பான கதைக்களம், திடீர் திருப்பம், கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் நடிகர்களின் நடிப்பு என இந்த சீரியல் தமிழ்நாடு மக்களின் பேவரைட் சீரியலாக வலம்வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தின் மனைவியாக நடிப்பவர் நடிகை கனிகா.

இவர் ஏற்கனவே தமிழ் மக்களுக்கு மிகவும் பரிட்சயமானவர். 2002-ஆம் ஆண்டு வெளியான ‘five star’ படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் இவர். மலையாளம் – தெலுங்கு மொழி படங்களிலும் இவர் நடித்தார். அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘வரலாறு’ படத்தில் கனிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 41 வயதாகும் இவருக்கு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவருடன் 2008-ஆம் ஆண்டு திருமணமாகி மகன் ஒருவர் உள்ளார்.

தற்போது சீரியலில் களமிறங்கியுள்ள கனிகா அவ்வப்போது கிடைக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை கவுதமியின் பேட்டியில், கனிகா தனது வாழ்க்கையில் துயரமான பக்கத்தை மனம் திறந்து பேசியுள்ளார், அதில் அவர் கூறுகையில், ’ புற்றுநோய் விழிப்புணர்வு குறித்துஅதிகம் பேசும் தன்னுடைய அம்மா மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டார் என்று கூறினார். அவருக்கு ஒரு நாள் மார்பகத்தில் வலி ஏற்பட்டு எனக்கு போனில் விஷயத்தை கூறினார், உடனே மருத்துவமனை சென்று பலகட்ட சோதனைகளின் முடிவாக அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது என்ற கனிகா, அது தன்னை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றதாக கூறினார்.

வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்று கூறிய அவர், கீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை உள்ளிட்ட பல வேதனைகளை எனது அம்மா சந்தித்தார் என்றார் கனிகா. மிகவும் கஷ்டமான நேரங்களில், காரில் பாடல்களை ஒலிக்க விட்டு அழுவேன் என்று கூறினார் கனிகா. மேலும், சிகிச்சையின் போது தனது அம்மா பட்ட வேதனைகளை பார்த்து நொந்து போனதாக வேதனையுடன் வேதனையுடன் தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணத்திற்காக தனது தாயின் மார்பகத்தை வெட்டி எடுத்த பிறகு மிகவும் கஷ்டமாகிவிட்டது என்றும் வேதனையுடன் தெரிவித்தார். தனது வாழ்வின் மிகவும் துயரமான தருணத்தை பகிர்ந்த கனிகாவின் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *