பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஒன்று… உலகப் போரின் விளிம்பில்: கிரேக்கத்தின் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கை

உக்ரைன் போர் தொடர்பில் முதல்முறையாக கணித்த, மத்திய கிழக்கில் பதட்டம் அதிகரிக்கும் என்ற கிரேக்கத்தின் நாஸ்ட்ராடாமஸ் தற்போது மூன்றாம் உலகப் போர் குறித்து எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும்

கிரேக்க மக்களால் புனிதராக கொண்டாடப்படும் Paisos என்ற ஞானி ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பில் முதன்முறையாக கணித்தவர் என கூறப்படுகிறது. தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என கூறியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

காஸா தொடர்பிலும் அவர் தமது கணிப்பை குறிப்பிட்டுள்ளார். 1994ல் Paisos மரணமடைந்தாலும், இஸ்ரேல் எல்லையில் அக்டோபர் 7ம் திகதி நடந்த படுகொலைகளுக்கு பின்னர் கிரேக்க ஊடகங்கள் இது தொடர்பில் Paisos கணித்துள்ளதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தனர்.

காஸா குறித்து அவர் பதிவு செய்துள்ளதில், பாலஸ்தீனம் போர்க்களமாக மாறும், சாக்கடல் கல்லறையாக மாறும். இது முதல் பாதி, ஆனால் இதற்கு இரண்டாம் பாதி ஒன்றும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பதிவில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச்செல்லும் என குறிப்பிட்டுள்ளார். அதில், மத்திய கிழக்கு போர்க்களமாக மாறும், ரஷ்யர்களும் பங்கேற்பார்கள்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து

இஸ்தான்புல்லில் ரஷ்யர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையே ஒரு பெரிய போர் வெடிக்கும், அங்கே அதிக இரத்தம் சிந்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். கிரேக்கத்தின் Mount Athos பகுதியை சேர்ந்த Paisos ஐரோப்பிய ஒன்றியம் கலைக்கப்படும் என்றும் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இதற்கு காரணமாக இருப்பார்கள் என்றும் கணித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் பல ஆண்டுகளுக்கு நீடிக்காது என்றும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தை சீர்குலைப்பார்கள் எனவும்,

உண்மையில் இரு நாடுகளும் ஒரு தேசம் என்பதால், ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள் எனவும் கிரேக்க ஞானியான Paisos கணித்துள்ளார். துருக்கியின் Cappadocia பகுதியில் 1924ல் பிறந்த Paisos, அப்போதைய அரசியல் சூழல் காரணமாக குடும்பத்துடன் கிரேக்கத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.

கிரேக்கத்த்யின் Mount Athos பகுதியில் பல ஆண்டுகள் தங்கியிருந்த Paisos 1949ல் தம்மை ஒரு ஞானியாக வெளிப்படுத்தினார். தமது 69வது வயதில் கடவுள் தம்மை அழைப்பதாக குறிப்பிட்டு, 1994ல் மரணமடைந்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *