பிரித்தானியாவில் ஜாக்பாட் வென்ற தம்பதி: வறுமையில் வாடும் சகோதரர் கூறியுள்ள செய்தி
தங்கள் 50 வயதுகளில், லொட்டரியில் 61 மில்லியன் பவுண்டுகள் பரிசு வென்றுள்ள பிரித்தானிய தம்பதியர் குறித்த செய்தி நினைவிருக்கலாம்.
இந்நிலையில், லொட்டரியில் பரிசு வென்ற அந்த பெண்ணின் தம்பி, வறுமையில் வாடுவதாக தகவல் கிடைத்துள்ளது.
பிரித்தானியாவில் ஜாக்பாட் வென்ற தம்பதி
இங்கிலாந்திலுள்ள லங்காஷையரைச் சேர்ந்த ரிச்சர்டு (Richard, 54), டெபி (Debbie Nuttall, 54) தம்பதியர், தங்கள் 30ஆவது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக Fuerteventura என்னும் ஸ்பெயின் தீவுக்குச் சென்றுள்ளார்கள்.
அப்போது, ரிச்சர்டுக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி, தம்பதியரின் வாழ்வையே மாற்றிவிட்டது. ஆம், தம்பதியர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 61 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது.
வறுமையில் வாடும் சகோதரர்
இந்நிலையில், டெபியின் சகோதரர் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. டெபியின் தம்பியான Glen, அரசு உதவி பெற்று, தற்காலிக குடியிருப்பு ஒன்றில் வாழ்ந்துவருகிறார். அவர் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட தனது 10 வயது மகனுடன் கஷ்டப்பட்டுவருவது தற்போது தெரியவந்துள்ளது.
டெபியும் கிளென்னும் இளம் வயதில் நெருக்கமான அக்கா தம்பியாக வாழ்ந்துவந்தாலும், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. தம்பி ஏதோ தகாத வார்த்தையால் அக்காவைத் திட்டிவிட, இருவரும் பிரிந்திருக்கிறார்கள்.
அதற்குப் பிறகு பல ஆண்டுகளாக இருவரும் பேசிகொள்வதேயில்லை. இடையில் ஒருமுறை தன்னையும் தன் மகனையும் பல்பொருள் அங்காடி ஒன்றில் பார்த்தும், டெபி கண்டுகொள்ளாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார் கிளென்.
தம்பி தெரிவித்துள்ள செய்தி
தன் அக்காவுக்கு லொட்டரியில் 61 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளதை செய்தித்தாள் மூலமாக அறிந்துகொண்டதாக தெரிவிக்கும் கிளென், அவருக்கு பரிசு கிடைத்ததில் தனக்கு மகிழ்ச்சி என்கிறார்.
அதே நேரத்தில் எனக்கு உதவி செய் என்று கேட்டு நான் அக்கா வீட்டு வாசலில் போய் நிற்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அக்காவுக்கு பரிசு கிடைத்ததில் எனக்கு பொறாமை எதுவும் இல்லை என்று கூறியுள்ள கிளென், தனக்கு அவர் மீது வெறுப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.