இந்தியாவில் கிடைத்த British காலத்து பொக்கிஷம்., அஸ்திவாரம் தோண்டும்போது நடந்த சம்பவம்

இந்தியாவில் 150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் (British Era) கால பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மார்ச் 5-ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) நடந்துக்ள்ளது.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டிக்கொண்டிருந்த தொழிலாளர்களால் ஆங்கிலேயர் காலத்து வெள்ளிக் காசுகள் கண்டெடுக்கப்பட்டன.

குவாலியரின் கல்லாசிபுரா பகுதியில் தொழிலாளர்களால் இந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சஞ்சய் பால் என்ற நபர் ஒரு வீட்டைக் கட்ட கூலித்தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் குழி தோண்டும்போது வெள்ளிக் காசுகள் கிடைத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

புதையல் கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூலித்தொழிலாளர்கள் இந்த நாணயங்களை பகிர்ந்து சத்தம் போடாமல் தப்பிக்க முயன்றனர்.

சஞ்சய் பாலின் பக்கத்து வீட்டுக்காரரும் அதைப் பற்றி அறிந்ததும் நாணயங்களில் ஒரு பங்கை கேட்டுள்ளார். இதனால் மோதல் ஏற்பட்டது.

இந்த விஷயம் சஞ்சய் பாலின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும், அவர்கள் உடனடியாக அங்கு சென்றனர்.

சஞ்சய்பாலின் மகன் ஹரிஷ் கூறுகையில், வீட்டின் அஸ்திவாரம் அகற்றப்படும் போது, ​​கிடைத்த புதையல் குறித்து கேள்விப்பட்டதாகவும், தொழிலாளர்கள் 40 முதல் 50 நாணயங்களை கண்டுபிடித்ததாகவும், வீட்டை அடைந்தபோது யாரும் இல்லை என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஜனகஞ்ச் காவல் நிலையத்தை அணுகிய ஹரிஷ், நடந்த சம்பவம் குறித்து விளக்கினார்.

தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர்.

புகாரின் பேரில் ஒரு குழு உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, பங்கு கேட்ட வீட்டின் பக்கத்து வீட்டுக்காரருடன் இரண்டு தொழிலாளர்களையும் கைது செய்வதாகக் கூறினர். அவர்களிடம் இருந்து ஆங்கிலேயர் காலத்து 7 வெள்ளி நாணயங்களை பொலிஸார் கைப்பற்றினர்.’

இதில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நாணயங்கள் 150 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.

நாங்கள் நாணயங்கள் குறித்து தொல்லியல் துறையையும் அணுகியுள்ளோம். அவர்களிடமிருந்து பதில் கிடைத்த பிறகு, எந்த மாதிரியான சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுப்போம், என்று பொலிஸார் தெரிவித்தனர். காசுகளை மறைத்து வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *