பிரித்தானியா பள்ளி பேருந்தின் சாரதி மரணம் இயற்கையானது! வெளியாகியுள்ள முக்கிய தகவல்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு நடந்த பள்ளி பேருந்து விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் இயற்கைக் காரணங்களால் இறந்ததாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பள்ளி பேருந்து விபத்து
பிரித்தானியாவின் விர்ராலில்(Wirral) உள்ள M53 சாலையில் கடந்த ஆண்டு நடந்த பள்ளி பேருந்து விபத்தில் உயிரிழந்த சாரதி ஸ்டீபன் ஷ்ரிம்ப்டன் (40) இயற்கைக் காரணங்களால் இறந்ததாக லிவர்பூல் மரண விசாரணை அலுவலகம்(Liverpool coroner’s office ) தெரிவித்துள்ளார்.

ஸ்டீபன் ஷ்ரிம்ப்டன் (40) என்ற பள்ளி பேருந்து ஓட்டுநர் கடந்த செப்டம்பர் 29, 2023 அன்று பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.

West Kirby மற்றும் Calday Grange grammar பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் வடக்கு நோக்கிய பாதையில் இந்த துயர சம்பவம் நடந்தது.

சாரதி ஸ்டீபன் ஷ்ரிம்ப்டன்(Stephen Shrimpton,) இயற்கைக் காரணங்களால் இறந்ததாக அறிக்கை வெளியானதை தொடர்ந்து, ஷ்ரிம்ப்டன் தொடர்பான வழக்கு விசாரணையும் முடித்து வைக்கப்பட்டு விட்டதாக மரண விசாரணை அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

வெளியாகி இருந்த சிசிடிவி காட்சிகளில், ஷ்ரிம்ப்டன் பேருந்தில் இருந்து சக்கரத்தின் பின்னால் இடதுப் புறம் சாய்ந்ததை பார்க்க முடிந்தது. இதையடுத்து பேருந்தானது சாலையில் இருந்து விலகி சென்று கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த 15 வயது சிறுமி
இந்த சம்பவத்தில் பள்ளி பேருந்தில் பயணித்த 50 சிறுவர்களில் Chester பகுதியை சேர்ந்த Jessica Baker என்ற 15 வயது சிறுமி உயிரிழந்தார்.

மேலும் 4 சிறுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அதில் ஒரு 14 வயது சிறுவனுக்கு வாழ்க்கையை மாற்றும் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்து இருந்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *