கடவுச்சீட்டு ஏதுமின்றி அமெரிக்காவுக்கு பறந்த பிரித்தானியர்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து கடவுச்சீட்டு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இன்றி, பிரித்தானியர் ஒருவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு பயணித்துள்ள சம்பவம் தீவிர விசாரணைக்கு காரணமாகியுள்ளது.
ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து
குறித்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உள்விவகார செயலாளர் James Cleverly கோரியுள்ளார். அதிர்ச்சியடையவைக்கும் இந்த சம்பவமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் திகதி நடந்துள்ளது.
46 வயதான Craig Sturt என்ற வேலையற்ற நபர் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து, எந்த வித பாதுகாப்பு மற்றும் ஆவண சோதனை எதையும் முன்னெடுக்காமல் சாமர்த்தியமாக விமான பேருந்தில் ஏறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் கொண்டாடும் பொருட்டு அமெரிக்காவுக்கு புறப்படும் நூற்றுக்கணக்கன பயணிகளுடன் அவரும் பயணித்துள்ளார். உண்மையில் அந்த விமானமானத்தின் அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும்,
மாயமாகியுள்ளதாக தகவல்
ஆனால் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான இணைப்பு விமானத்தை தவறவிட்ட பயணிகளால், தொடர்புடைய நியூயார்க் விமானத்தில் சில இருக்கைகள் காலியாக இருந்துள்ளது.
அந்த வாய்ப்பை Craig Sturt பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 9 மணி நேரத்திற்கு பின்னர் விமானம் தரையிறங்கியதும் அமெரிக்க அதிகாரிகளிடம் Craig Sturt சிக்கியுள்ளார்.
அங்கிருந்து அவரை வெளியேற்றிய நிலையில், கிறிஸ்துமஸ் நாளில், இரவு 8 மணிக்கு Craig Sturt லண்டனில் அதிகாரிகளிடம் சிக்கினார். ஆனால் ஜனவரி 22ம் திகதி அவரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.