அண்ணே வந்துட்டாரு, தம்பிங்களா ஓரம்போங்க.. Flipkart என்ட்ரி பிளிங்கிட், ஜெப்டோ ஷாக்..!!
இந்திய சந்தையில் அமேசானுடன் போட்டியிட்டு வரும் வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட், குவிக் காமர்ஸ் துறையில் நுழைவதற்கு தேதி குறித்து வருகிறது.
என்டிராக்கர் தகவலின்படி, அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் 10க்கும் அதிகமாக நகரங்களில் 10-15 நிமிட டெலிவரி சேவைகளைத் தொடங்க பிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது நடந்தால், Zepto, Blinkit , Swiggy இன் இன்ஸ்டாமார்ட் போன்ற நிறுவனங்களுக்கு பிளிப்கார்ட் சவால்விடும். சந்தையின் போட்டித்தன்மையை தலைகீழாக புரட்டிப்போடும் வல்லமை கொண்டு உள்ளது, பிளிப்கார்ட்டின் முடிவு.
பிளிப்கார்ட் குவிக் காமர்ஸ் துறைக்குள் நுழைய வேண்டுமே என்று நுழையாமல் சரியாக திட்டமிட்டு, கணக்கிட்டு களத்தில் இறங்குகிறது. பிற நிறுவனங்களை போல் அல்லாமல் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் அனைத்து பொருட்களும் உள்ளது, டெலிவரி முறையை மட்டுமே சரி செய்ய வேண்டும், இதற்காக தான் டார்க் ஸ்டோர்களை நிறுவும் பணியில் இறங்கியுள்ளது.
குவிக் காமர்ஸ் சேவைக்காக பிளிப்கார்ட் அதன் விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறது. பிளிப்கார்ட் இப்போது பெங்களூரு, டெல்லி – என்சிஆர், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள கருப்பு சந்தை நெட்வொர்க்கை உள்ளடக்கியது.
பிளிப்கார்ட்டின் நோக்கம் மளிகை சாமான்களை மட்டும் வழங்காமல், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், தினசரி அத்தியாவசிய பொருட்கள் உட்பட, அதன் போட்டியாளர்களை விட பரந்த சந்தையை அடையும் திட்டத்தில் உள்ளது.
இந்திய குவிக் காமர்ஸ் சந்தையின் மதிப்பு தற்போது கிட்டத்தட்ட $45 பில்லியன் மதிப்பாகும். தற்போது, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இங்கு பிளிப்கார்ட்டின் என்ட்ரி பெரும் போட்டியை ஏற்படுத்தும். இந்திய வாடிக்கையாளர்களுக்கு விரைவான வர்த்தகம் நிச்சயம் பல நன்மைகளை வழங்க முடியும்.
அதன் விரைவான வர்த்தக இலக்கு பற்றிய ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், பிளிப்கார்ட் செய்தித் தொடர்பாளர், கடந்த சில மாதங்களில், 20 நகரங்களில் ஒரே நாளில் டெலிவரி செய்வது உட்பட, எங்கள் டெலிவரி திறனை மேம்படுத்த பல முதலீடுகளைச் செய்துள்ளோம்.
இது மொபைல்கள், அத்தியாவசிய பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபகரணங்கள், ஃபேஷன், புத்தகங்கள், வாழ்க்கை முறை தயாரிப்புகளை உள்ளடக்கியது.
வளர்ச்சியடைந்து வரும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கும், மதிப்பு, தேர்வு மற்றும் வேகம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், வரும் மாதங்களில் இந்த முன்னணியில் அதிக முயற்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றார்.