புதுமாப்பிளைக்கு 250 வகையான உணவுகள் பரிமாறிய மைத்துனர்… வைரலாகும் வீடியோ
மைத்துனரின் உபசரிப்பில் திக்கு முக்காடிப்போன புதுமாப்பிள்ளை 250 உணவுப்பொருட்களில் சிலவற்றை கொஞ்சம் கொஞ்சம் மட்டும் டேஸ்ட் பார்த்து விட்டு, இதுக்கு மேல முடியாதுடா சாமி என்று எழுந்துவிட்டார்.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் விருந்தோம்பல் தூக்கலாகவே இருக்கும்.
இந்நிலையில், சங்கராந்தியையொட்டி கிருஷ்ணா மாவட்டம் சித்துபூர் கிராமத்தை சேர்ந்த சாய்நாத், தனது தங்கை நவ்யா, மாப்பிள்ளை ரேவந்த் ஆகியோருக்கு சிறப்பான விருந்து படைக்க முடிவு செய்தார். இதற்காக கொச்சியில் வசித்து வரும் இருவரையும் அழைத்து 250 வகையான உணவுப்பொருட்களை பரிமாறினார்.
மைத்துனரின் உபசரிப்பில் திக்கு முக்காடிப்போன புதுமாப்பிள்ளை 250 உணவுப்பொருட்களில் சிலவற்றை கொஞ்சும் கொஞ்சும் டேஸ்ட் பார்த்து விட்டு, இதுக்கு மேல முடியாதுடா சாமி என்று எழுந்துவிட்டார்.