பட்ஜெட் 2024: மோடி – நிர்மலா சீதராமன் டார்கெட் மொத்தமும்.. இந்த ஒரு துறையின் மீது தான் போலியே..!!

பட்ஜெட் 2024 தாக்கல் செய்யும் தேதி நெருங்கி வருவதால், 25 கோடி மக்களுக்கு இருக்கும் விவசாயிகள் மற்றும் முறைசாரா தொழிலாளர் பிரிவு அதிகப்படியான கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் பட்ஜெட் அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகத் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கை என்றாலும், தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் சிறப்பு அறிவிப்புகள் வர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதனால் சாமானிய மக்கள் மத்தியில் இந்தப் பட்ஜெட் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது, இதற்கு ஏற்றார் போல் மத்திய அரசும் இடைக்காலப் பட்ஜெட் மூலம் தேர்தலில் வெற்றிக்கான சாமானிய மக்களை ஈர்க்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில், அரசின் முதன்மையான நேரடிப் பலன் நிதி பரிமாற்றத் திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி அல்லது PM-கிசான் திட்டத்தின் கீழ் தற்போது ஒரு விவசாயிக்கு 6,000 ரூபாய் அளித்து வருகிறது.
இதை 50 சதவீதம் அதிகரித்து ஆண்டுக்கு 9,000 ரூபாயாக அளிக்க அறிவிப்புகள் வெளியிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனக் கணிப்புகள் உள்ளது. இந்த ஒரு அறிவிப்பு மூலம் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சுமார் 60 சதவீத கிராமப்புற குடும்பங்களை ஈர்க்க முடியும் என்பது மோடி அரசு திட்டமிடலாம். இதேபோல் விவாசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதிய நிறைவேற்றும் விதிமாகவும் இந்த அறிவிப்பு இருக்கும். நாரி-சக்தி திட்டம்: இந்தப் பட்ஜெட்டல் பெண் விவசாயிகளுக்கு PM-KISAN இன் கீழ் ரொக்க மானியத்தை 12,000 ரூபாயாக இரட்டிப்பாக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. மொத்த விவசாயிகளில் 60 சதவிகிதம் பெண்களாக இருந்தாலும், அவர்களில் 13 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் தான் சொந்தமாக நிலத்தை வைத்திருக்கிறார்கள் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்களின் பங்கீட்டை அதிகரிக்க நாரி-சக்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை PM-KISAN திட்டத்தின் கீழ் பெண் விவசாயிகளுக்குத் தற்போது கிடைக்கும் 6000 ரூபாய் தொகையை 12000 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விவசாயக் கடன்கள்: விவசாயி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பணவீக்கம் குறைந்து வேகமாகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால், விவசாயக் கடனில் தளர்வுகளைப் பட்ஜெட்டில் அறிவிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆறாவது முறையாகத் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.