பட்ஜெட் 2024 கூட்டத்தொடர் இன்று துவக்கம்.. 6வது முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்

புதன்கிழமை (இன்று) துவங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் கட்டமாக இருஅவை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையுடன் அமர்வு தொடங்கும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு முழுப் பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இருஅவை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்திற்கு முன்னதாக, செவ்வாயன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது, அதில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஜனாதிபதி ஆட்சியின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீருக்கான பட்ஜெட்டையும் சீதாராமன் தாக்கல் செய்வார் என்று கூறினார்.
பிப்ரவரி 9 ஆம் தேதி முடிவடையும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய நிகழ்ச்சி நிரல், ஜனாதிபதியின் உரை, இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் மற்றும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் உரையுடன் பட்ஜெட் தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்கும் மேலும் இந்தப் பட்ஜெட் கூட்டம் சுமுகமாக நடத்துவதை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தைத் திரும்பப் பெறுமாறு இரு அவைகளின் தலைமை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைக்க உள்கட்டமைப்புத் துறை உட்பட முக்கியமான துறைகளில் அதிகப்படியான மூலதனத்தைச் செலுத்த முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.