மீனத்தில் புத ஆதித்ய யோகம்… பங்குனி மாத்தின் அதிர்ஷ்ட ராசிகள் எவை..!
சூரியன் பெயர்ச்சி பலன்கள்: சூரியன் பங்குனி மாத பிறப்பான 14 ஆம் தேதி அன்று, கும்பத்தில் இருந்து மீன ராசிக்கும் பிரவேசித்தார். சூரியன் மீன ராசியில் இருப்பதால், பங்குனி மாதம் மீன மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனின் இந்த பெயர்ச்சி மீன சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், மீன ராசியில் புதனுடன் சூரியன் இணைவார். ஏற்கனவே புதன் மீன ராசியில் வீற்றிருக்கும் நிலையில், புதனும் சூரியனும் இணைந்து பூத ஆதித்ய யுகம் உருவாகிறது. இந்நிலையில், பங்குனி மாத அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்வோம்.
மேஷ ராசி பங்குனி மாத பலன்கள்
மேஷ ராசியினர் பங்குனி மாதத்தில், செலவில் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நிதி நெருக்கடி ஏற்படும். அதே போன்று வாக்குவாதங்களில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். இதனால் உறவுகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷப ராசி பங்குனி மாத பலன்கள்
ரிஷப ராசியினர் பங்குனி மாதத்தில், பண வரவை பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். வருமான ஆதாரங்கள் பெருகும். சமூகத்தில் மரியாதை கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.
மிதுன ராசி பங்குனி மாத பலன்கள்
மிதுன ராசியினர், பங்குனி மாதத்தில் புதிய வாழ்வை தடுக்கும் வாய்ப்பு வரும். பிரச்சனைகள் நீங்க நிம்மதி பிறக்கும். பணியிடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவியுடன் திட்டமிட்டபடி வேலைகள் நடக்கும்.
கடக ராசி பங்குனி மாத பலன்கள்
கடக ராசியினர் பங்குனி மாதத்தில், இன்ப அதிர்ச்சிகளால் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். செயல் திறனால் அனைவரும் மனதையும் கவருவார்கள். வேலையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சிம்ம ராசி அங்குனி மாத பலன்கள்
சிம்ம ராசிகளுக்கு பங்குனி மாசம், சிறிது பிரச்சனைகளை கொடுக்கும் மாதமாக இருக்கும். கவிஞர்களுடன் உறவுகள் பாதிக்கப்படலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முதலீடுகளில் நினைத்த அளவிற்கு வருமானம் கிடைக்காது
கன்னி ராசி பங்குனி மாத பலன்கள்
கன்னி ராசிகளுக்கு பங்குனி மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். மன உளைச்சல் அதிகரிக்கலாம். வேலைகளில் தாமதம் ஏற்படலாம். ஆனால் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதுவும் கடந்து போகும் என்ற பழமொழிக்கு ஏற்ப அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும்.
துலாம் ராசி பங்குனி மாத பலன்கள்
துலாம் ராசியினருக்கு பங்குனி மாதம் சந்தோஷத்தை கொடுக்கும் மாதமாக இருக்கும். உங்கள் செயல் திறன் மூலம் வெற்றிகளை குவிப்பீர்கள். எதிரிகளின் சதியை முறியடித்து அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
விருச்சிக ராசி பங்குனி மாத பலன்கள்
விருச்சிக ராசியினருக்கு பங்குனி மாத சூரிய பெயர்ச்சி, செல்வாக்கை அளிக்கக் கூடியதாக இருக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தனுசு ராசி பங்குனி மாத பலன்கள்
தனுசு ராசியினருக்கு சூரியனின் பெயர்ச்சி, சிறிது குழப்பத்தையும் மன உளைச்சலையும் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். நினைத்தபடி காரியம் நிறைவேறாமல் மனவருத்தத்தை கொடுக்கும். எல்லா விஷயங்களிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
மகர ராசி பங்குனி மாத பலன்கள்
மகர ராசியினருக்கு சூரியன் பெயர்ச்சி மிகவும் சாதகமான பலனை கொடுக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செயல் திறனால் அனைவர் மனதையும் கவர்வீர்கள். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்ப ராசிக்கான பங்குனி மாத பலன்கள்
கும்ப ராசியினருக்கு பங்குனி மாதம் அவ்வளவு சாதகமாக இருக்காது. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைவரையும் நம்பாமல் எச்சரிக்கையாக இருக்கவும். இல்லையென்றால் உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
மீன ராசி பங்குனி மாத பலன்கள்
மீன ராசியினர், பங்குனி மாதத்தில் சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கலாம். வேலை இழப்பு ஏற்படும் அபாயமும் உண்டு. ஆனால் கவலை வேண்டாம். பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தினரிடமிருந்து உதவியும் ஆதரவும் கிடைக்கும்.