Budhan 2024: புதனால் தலைகீழ் மாற்றங்கள் பெறும் ராசிக்காரர்கள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். நவக்கிரகங்களில் புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. புதன் பகவான் புத்திசாலித்தனம், கல்வி, அறிவு, ஞானம், பேச்சு, திறமை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.
புதன் பகவான் தற்போது தனுசு ராசியில் இருந்து பின்னோக்கிய பயணமாக விருச்சிக ராசிக்கு சென்று கொண்டிருக்கிறார் இது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. இதில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.
கடக ராசி
புதன் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை கொடுக்கவில்லை. பணம் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை குறைய ஆரம்பிக்கும். குடும்ப வாழ்க்கையில் சில செயல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செலவு செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணத்தை சேமித்துக் கொள்வது நல்லது. வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷப ராசி
புதன் பகவானால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்வதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுப்பது தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சில சொற்களில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் புதன் பகவான் ஒன்பதாம் வீட்டிலிருந்து பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளார். உங்க குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படாது வாய்ப்பு உள்ளது. பொறுமையாக இருந்தால் பல வெற்றிகளை காணலாம். பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பயணங்கள் செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாமல் யாரிடமும் பணத்தை கொடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும்.