சாகச விளையாட்டில் குத்திக் கிழித்த காளை: உயிருக்கு போராடும் 26 வயது இளைஞர்

மெக்சிகோவில் காளை சண்டை வீரர் கழுத்தில் அறுக்கப்பட்டு, உயிருக்கு போரடிக் கொண்டிருக்கும் விடயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகன் காளை சண்டை
மெக்சிகன் காளை சண்டை என்பது மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும். Tlaxcala நகரில் நடக்கும் இந்த காளை சண்டை விளையாட்டு, 16ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் வெற்றியாளர்களால் கொண்டு வரப்பட்டது.

கடந்த சனிக்கிழமை Tlaxcala-யில் காளை சண்டை விளையாட்டு நடந்தது. இதில் ஜோஸ் ஆல்பர்டோ ஆர்டிகா (26) என்ற வீரர் சாகச விளையாட்டில் ஈடுபட்டார்.

அவர் கையில் துணியுடன் காளைக்காக காத்திருந்தபோது, அவரை நெருங்கிய காளை ஜோஸ் விலகுவதற்குள் முட்டி சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஜோஸுக்கு கண், தாடை, காது மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

உயிருக்கு போராட்டம்
அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜோஸ் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ தலைநகர் Mexico City விலங்கு உரிமை ஆர்வலர்களால் தொடங்கப்பட்ட சட்டப் போராட்டத்தின் காரணமாக, காளை சண்டை விளையாட்டிற்கு சாத்தியமான தடையை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *