டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா புதிய சாதனை.. கும்ப்ளே சாதனை முறியடிப்பு.. ஜாகிர் கான் ரெக்கார்ட் சமன்
கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா அபாரமாக செயல்பட்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் ஆட்டம் இழக்க இந்திய அணி 153 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸை களம் இறங்கியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுமாறினர். எனினும் முதலில் விட கொஞ்சம் பொறுப்பான ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா வெளிப்படுத்தினர்.
குறிப்பாக தொடக்க வீரர் மார்க்கரம் மட்டும் அபாரமாக நின்று விளையாடி வர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 62 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோர் உடன் தென்னாபிரிக்க அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அப்போது பும்ரா அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.