தென்னாப்பிரிக்காவில் விலைமதிப்பில்லாத அதை பும்ரா எனக்கு கொடுத்தாரு.. இங்கிலாந்து தொடருக்கு ரெடி.. முகேஷ் குமார்
இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது.
அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் யுக்தியை பயன்படுத்தி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தங்களுடைய சொந்த மண்ணில் எப்போதுமே கில்லியாக செயல்படக்கூடிய இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வெல்லும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் சவாலான தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் 55 ரன்களுக்கு சுருட்டி சிறப்பான வெற்றி பெற்ற இந்தியா 13 வருடங்கள் கழித்து அந்நாட்டில் தொடரை சமன் செய்தது.
பும்ராவின் ஆலோசனை:
எனவே அதே உத்வேகத்துடன் தங்களுடைய சொந்த ஊரில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் இங்கிலாந்தை வீழ்த்த இந்தியா தயாராகியுள்ளது. இந்நிலையில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் விளையாடிய தமக்கு யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசுவது பற்றி பும்ரா விலைமதிப்பற்ற ஆலோசனைகளை கொடுத்ததாக முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் பெங்கால் அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடியுள்ள தமக்கு இந்திய அணியில் பும்ரா உதவுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி டெலிகிராஃப் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “பும்ரா பாய் எனக்கு யார்கர் பந்துகளை சரியாக வீசுவதில் தொடர்ந்து ஆலோசனைகளை கொடுத்துக் கொண்டே இருந்தார். குறிப்பாக நீங்கள் யார்கர் பந்துகளை நன்றாக வீசுகிறீர்கள். அதை அப்படியே செய்யுங்கள் என்று பும்ரா தன்னம்பிக்கை கொடுத்தார்”