‘ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்டது அதிர்ச்சியும், ஆச்சரியமாகவும் உள்ளது’ – மிட்செல் ஸ்டார்க்
ரூ. 24.75 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது அதிர்ச்சியும், ஆச்சரியமாகவும் உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கை ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணி விலைக்கு வாங்கியது.
ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார்.
அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருப்பதாக கூறியுள்ளார் மிட்செல் ஸ்டார்க்.
அதிக விலைக்கு வாங்கப்பட்டது தனக்கு நெருக்கடியாக இருக்கும் என்று ஸ்டார்க் கூறியுள்ளார்.
கடைசியாக விளையாடிய ஐபிஎல் தொடரில் பெற்ற அனுபவம் தனக்கு உதவும் என்றும்,
அதன் மூலம் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.