எம்பி தேர்தலுடன் இடைத்தேர்தல்? ராஜினாமாவை ஏற்றார் அப்பாவு

காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
விஜயதாரணி தனது ராஜினாமா கடிதத்தை இணைய வழியில் அனுப்பியதோடு, தொலைபேசியிலும் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அப்பாவு முறைப்படி அவர் தனது ராஜினாமா கடிதத்தை உறுதி செய்து அனுப்பியதால் அதனை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் அப்பாவோ தெரிவித்துள்ளார்.
விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.