புரமோஷனுக்கு வர முடியும்… துக்கம் கேட்க வரமுடியாதா? சிக்கிய சிவகார்த்திகேயன், தனுஷ்..!
தமிழ் சினிமாவின் மூத்த கலைஞனான விஜயகாந்த் இறப்புக்கு ரசிகர்கள் உடன் திரை பிரபலங்கள் அனைவரும் வந்து துக்கம் கேட்டு அவரை கடைசியாக பார்த்து செல்லும் நிலையில் சில நடிகர்கள் வர முடியாமல் இருக்கின்றனர்.
இதில், சூர்யா, விஷால், எஸ்.ஜே.சூர்யா போன்ற நடிகர்கள் தாங்கள் வெளிநாட்டில் சிக்கி கொண்டதை ஓபனாகவே தெரிவித்து வீடியோ, போஸ்ட் போட்டு தங்கள் நிலையை உணர்த்திவிட்டனர். அஜித் வெளிநாட்டில் இருப்பதால் பிரேமலதாவுக்கு நேரடியாக கால் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இப்போ இதில் சிக்கி இருக்கும் ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ் தான். ஏனெனில் சமீபத்தில் தான் சிவகார்த்திகேயனின் அயலான் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டார். புரோமோஷனுக்கு தொடர்ந்து பேட்டிக் கொடுத்து வருகிறார்.
இதில் நேற்று அவர் சமூக வலைத்தளத்தில் ஒரு போஸ்ட்டுடன் முடித்து கொண்டார். நேரில் அஞ்சலி செலுத்த வரவே இல்லை. இவரை தொடர்ந்து தனுஷ், ஜெர்மலியில் தான் இருக்கார். தற்போது டைரக்ஷன் வேலைகளில் இருப்பவரால் ஏன் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் தன்னுடைய தந்தை மூலமாக மாலை அணிவித்தாராம்.
இதில் அதிகம் கேட்கும் பெயராக சிம்பு பெயரும் இடம் பெற்று இருக்கிறது. விஜயகாந்தின் மீது அதிக பாசம் வைத்த அவர் கடைசி ஊர்வலம் கிளம்பும் வரை வரவில்லை. ஆனால் சிம்பு துபாயில் இருப்பதால் வரமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இவரும் போஸ்ட்டுடன் முடித்துவிட்டார் போல. இவர்கள் எல்லாருமே கஷ்டப்பட்டு வரவேண்டும் என நினைக்காமல் போஸ்ட்டுடன் முடித்து கொள்கின்றனர் என்பது வருத்தமான செய்தி தான்.