ஒப்பந்தம் நிறைவடைவதற்கு முன்பு வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய சொல்லலாமா..? வழக்கறிஞரின் விளக்கம் இதோ

சினேகா என்ற வேலைக்கு செல்லும் ஒரு பெண் நொய்டா செக்டார் 33 சொசைட்டியில் தங்குமிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வாடகை அப்பார்ட்மெண்ட்டிற்கு அவர் செல்லும் முன்பு அங்கு இன்வெர்ட்டர், கீசர் மற்றும் RO போன்ற பல்வேறு வசதிகள் இருப்பதாக அப்பார்ட்மெண்ட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அவை ஏதும் சேதமடையும் பட்சத்தில் அதனை வாடகைக்கு இருப்பவர்கள்தான் பணம் செலவு செய்து சரி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அந்த வீட்டிற்கு சென்ற மூன்று நாட்களுக்கு உள்ளாகவே RO மற்றும் இன்வெர்ட்டர் ஆகிய இரண்டுமே சேதமடைந்திருப்பதும், அது மிகவும் பழமையானதாக இருப்பதும் தெரிய வந்தது. இதன் காரணமாக வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருப்பவர் ஆகிய இருவருக்கு இடையேயும் பிரச்னை எழுந்தது. வாடகை ஒப்பந்தத்தில் 11 மாதங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதை பொருட்படுத்தாமல், 6 மாதங்களுக்குப் பிறகு வீட்டின் உரிமையாளர் சிநேகாவை அப்பார்ட்மெண்ட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். வாடகை ஒப்பந்தத்தில் 11 மாதங்கள் குறிப்பிடப்பட்டிருந்தும், வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு இருப்பவரை காலி செய்வதற்கான உரிமையை பெறுகிறாரா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது.

டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்களில் ரெசிடென்ஷியல் மற்றும் கமர்ஷியல் அப்பார்ட்மெண்ட்டுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது பலருக்கு தற்போது ஒரு மிகப்பெரிய வருமானமாக அமைவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நிஷாந்த் ராய் என்ற சிவில் வழக்கறிஞர் கூறுகிறார். வாடகை ஒப்பந்தத்தில் ஒரு சில அடிப்படை தேவைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பதால் அது சம்பந்தமான போதிய விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் இல்லை என்பதை அவர் கூறுகிறார்.

மேலும் இந்தியாவில் வாடகைக்கு விடுவதான செயல்முறை என்பது பெரும்பாலும் வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருப்பவர் ஆகிய இருவரின் பரஸ்பர புரிதலுக்குப் பிறகு செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த சில வருடங்களாக டெல்லி NCR பகுதி உட்பட வாடகை ஒப்பந்தங்கள் பயன்பாட்டில் இருப்பதாக அவர் கூறுகிறார். மேலும் வாடகை ஒப்பந்தம் பற்றி அவர் பேசுகையில், வாடகை ஒப்பந்தம் என்பது ஒரு சட்ட ரீதியான ஆவணம் என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை இருதரப்பினரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் சொல்கிறார்.

வாடகை ஒப்பந்தத்தில் 11 மாதங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த 11 மாதங்கள் என்ற கணக்கை வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருப்பவர் ஆகிய இருவரும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என்பதை வழக்கறிஞர் கூறுகிறார். இந்த காலகட்டத்திற்கு உள்ளாக வாடகையை அதிகப்படுத்துவதற்கான உரிமை வீட்டின் உரிமையாளருக்கு இல்லை. ஆனால் இந்த நிகழ்வில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நோட்டீஸ் பீரியட் வழங்கி வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய சொல்வதற்கான உரிமை வீட்டின் உரிமையாளருக்கு உண்டு. எனினும் வலுக்கட்டாயமாக அல்லது சண்டையிட்டு வீட்டை விட்டு காலி செய்ய சொல்லும்பொழுது அதனை மறுத்து முறையிடுவதற்கான உரிமையை வாடகைக்கு இருப்பவர் பெறுகிறார்.

இதனை தவிர்ப்பதற்காக ஒரு சில வாடகை ஒப்பந்தங்களில் லாக் இன் பீரியட்கள் உள்ளன. இந்த லாக்கின் பீரியடில் வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருப்பவர் ஆகிய இருவரும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் எந்தவித நோட்டீஸும் தருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் வாடகைக்கு இருப்பவர் அல்லது வீட்டு உரிமையாளர் ஆகிய இருவர் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. வேறு பிரச்னைகள் எழும் பட்சத்தில் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் போலீசார் அல்லது சட்டத்தின் உதவியை நாடலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *