பெட்ரோல் ஸ்கூட்டரை எக்ஸ்சேஞ்ஜ் செய்து ஓலா இ-ஸ்கூட்டரை வாங்கலாமா?.. போடு வெடிய! தரமான ஆஃபரை வெளியிட்ட ஓலா!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் எஸ்1 (S) வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது. மகளிர் தினத்தை முன்னிட்டே அது சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது. இதன் வாயிலாக பெண்களுக்கு என்ன மாதிரியான சிறப்பு சலுகையை அது அறிவித்து இருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க வரிவான பதிவிற்குள் போகலாம்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை மகளிர்களுக்காக அறிவித்து இருக்கின்றது. ஏற்கனவே இந்த நிறுவனம் மார்ச் சிறப்பு சலுகையாக ரூ. 25 ஆயிரம் தள்ளுபடியில் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது அது பெண்களுக்கான சிறப்பு சலுகையையும் அறிவித்து இருக்கின்றது.

இந்த அறிவிப்பின்படி, ஏற்கனவே வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி விலையுடன் கூடுதலாக மற்றுமொரு 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெண்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. அதாவது, பெண்களால் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரூ. 27 ஆயிரம் தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.

நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான எஸ்1 ஏர் (S1 Air), எஸ்1 எக்ஸ் (S1 X), எஸ்1 எக்ஸ்-பிளஸ் (S1 X+) மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) ஆகியவற்றிற்கு இந்த சலுகை பொருந்தும் என ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கின்றது. இதுதவிர, பெட்ரோல் ஸ்கூட்டர்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்துக் கொள்ளலாம் என்றும் நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

ஓலாவின் இந்த விலை குறைப்பு நடவடிக்கையால் எஸ்1 எக்ஸ்-பிளஸ் இ-ஸ்கூட்டரின் விலை ரூ. 84,999 ஆகவும், எஸ்1 ப்ரோவின் விலை ரூ. 1.30 லட்சம் ரூபாயகவும் மற்றும் எஸ்1 ஏர்-இன் விலை ரூ. 1.05 லட்சமாகவும் குறைந்திருக்கின்றது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேவேளையில், இந்த சிறப்பு சலுகை பெண்கள் தினமான நேற்றிலேயே வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் குறுகிய கால சலுகை என்பதால் இன்றும் மற்றும் நாளையும் மட்டுமே அது வழங்கப்பட இருக்கின்றது. அதாவது மார்ச் 8 தொடங்கி மார்ச் 10 வரையில் மட்டுமே மகளிர் தின சிறப்பு சலுகை வழங்கப்பட இருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியர்களின் நம்பிக்கையை ஈர்க்கும் பொருட்டு அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு 8 ஆண்டுகள்/ 80 ஆயிரம் கிமீ கூட்டப்பட்ட வாரண்டியை அறிவித்து இருக்கின்றது. இதற்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் கிடையாது என நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. இத்தகைய சிறப்பு திட்டத்தை இந்தியாவில் அறிவித்த முதல் நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக் மட்டுமே ஆகும்.

இதுதவிர, கூடுதல் வாரண்டி திட்டத்தையும் வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். அந்தவகையில், ரூ. 4,999 கட்டணம் செலுத்தினால் 1.25 லட்சம் கிமீட்டருக்கான வாரண்டி திட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவின் தலைவனாக ஓலா எலெக்ட்ரிக்கே இருக்கின்றது.

தொடர்ச்சியாக விற்பனை வளர்ச்சியையே சந்தித்து வருகின்றது. சென்ற பிப்ரவரி மாதத்தில் கூட நிறுவனம் 35 ஆயிரம் யூனிட்டுகளை விற்றதாக அறிவிப்பு வெளியிட்டது. முந்தைய எந்தவொரு மாதத்திலும் இல்லாத ஓர் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியாகும். சென்ற ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் இது 100 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

இத்தகைய தரமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையிலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது ஆஃபர்களை தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையால் அடுத்து வரும் மாதங்களிலும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே முதல் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *