மோடி மீண்டும் பிரதாரமாக வருவதை தடுக்க முடியுமா? சீமான்
நடிகர் விஜய் கட்டாயம் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்றும் அரசியலில் தனக்கு உறுதுணையாக இருப்பார் என நம்புவதாகவும் நாம் தமிழர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது, ” தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர். கன்னியாகுமரி தொகுதியில் மரியஜெனிபர், நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு சத்யா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்து தான் போட்டியிடும். எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று தெரிவித்தார்.
மோடி இந்தியாவின் பிரதமர் ஆவதை தடுக்கும் வலிமை தமக்கு இல்லை என்றும் காங்கிரஸ், பாரதீய ஜனதா என்ற இரண்டு கட்சிகளையுயம் சம எதிரியாக பார்ப்பதாகவும் தெரிவித்தார். தேசியமே இல்லை என்பது எனது கோட்பாடு, ஆகவே தேசிய கட்சியை தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் தெரிவித்தார். மோடி மீண்டும் பாரத பிரதமராக வந்து விடுவார் என்று தி.மு.க பூச்சாண்டி காட்டி வருவதாகவும், ஆனால், பா.ஜனதா -தி.மு.க இடையே ஒரு நல்ல உறவு என்பது இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தற்போது கேலோ விளையாட்டு போட்டிக்கு கூட தமிழில் பெயர் வைக்க முடியாமல் தான் திமுக உள்ளது. மோடி இதுவரை எந்த மாநில விளையாட்டு துறை அமைச்சரை சந்தித்துள்ளார்? ஆனால் தமிழகத்தில் உள்ள விளையாட்டு துறை அமைச்சரை மட்டும் சந்தித்ததாகவும் தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். அண்ணன் மட்டும்தான் தமிழகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக இருப்போம் என விஜய் நினைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.