Protein Supplement சிறுநீரகத்தை பாதிக்குமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

பொதுவாகவே அதிகரித்த வேலைப்பளு மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம் போன்ற காரணங்களினால் உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்தும் தன்மை மிகவும் அருகிவிட்டது என்றால் மிகையாகாதது.

தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலையில் இருக்கின்றனர். மேலும் துரித உணவுகளின் பெருக்கம் மற்றும் அதன் சுவைக்கு நாம் அடிமையாக இருப்பது போன்ற காரணங்களினால் உடல் பருமன் கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்துவிடுகின்றது.

இதனாால் உடல் பருமனை விரைவாக குறைக்க வேண்டும் என்ற தேவையுடையவர்களும் அதிகமாகிவிட்டனர். இதுவே ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு ஜிம் உருவாக காரணமாகிவிட்டது.

பெரும்பாலான மக்கள் உடல் எடையை விரைவாக குறைத்தால் போதும் எனபதற்காக ஜிம்மில் பரிந்துரைக்கப்படும் புரோட்டீன் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்கின்றார்கள் இதனால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து பலரும் அக்கறை செலுத்துவது கிடையாது.

உடற்பயிற்சியின் போது எடுத்துக்கொள்ளும் புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸால் சீறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. இது குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

Protein Supplement சிறுநீரகத்தை பாதிக்குமா?
ஜிம் செல்பவர்கள் பயன்படுத்தும் சப்ளிமெண்ட்ஸ் சிறுநீரகத்தை மிக மோசமாக பாதிப்பதாகவும், குறிப்பாக இதை தவறாக அல்லது அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் பட்சத்தில் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஜிம்மில் பரிந்துரைக்கப்படும் சப்ளிமெண்ட்களில் அதிகளவு செறிவூட்டப்பட்ட புரோட்டீன், கிரியாட்டின், செறிவூட்டப்பட்ட வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகமாக காணப்படுகின்றது.

மேலும் உடற்பயிற்சியின் போது நமது செயல்திறனை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இதில் மருந்துகளும் அனபாலிக் ஸ்டீராய்டுகளும் கலக்கப்படுகின்றது.

நமது தசைகளின் வளர்ச்சியையும் பெர்ஃபார்மன்ஸையும் அதிகப்படுத்தவுமே இந்த சப்ளிமெண்ட்ஸ் பயன்படுகிறது.

ஆனால் இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் சிறுநீரக செயல்பாட்டில் பாரிய பாதக விளைவுகளை ஏற்படுத்தி வீடுகின்றது.

குறித்த சப்ளிமெண்ட்ஸ்களில் பெரும்பாலும் புரதங்களே அதிகளவு இருக்கும். ஆனால் புரொட்டீன் மெடபாலிஸத்திலிருந்து கழிவுப் பொருட்களை சுத்திகரிக்கும் வேலையை சிறுநீரகமே செய்யகின்றது. இதனால் சிறுநீரகம் செயழிழக்கும் அபாயம் அதிகரிக்கின்றது.

தேவைக்கு அதிகமாக புரோட்டீனை எடுத்துக்கொள்யும் பட்சத்தில் கூடுதலான நைட்ரோஜெனஸ் கழிவை அகற்ற முடியாமல் சிறுநீரகம் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகின்றது.

இதனால் சிறுநீரகம் அசாதாரணமாக வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றது.இது நாளடைவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும்.

இவ்வாறு சிறுநீரகத்தில் ஏற்படும் அதிக அழுத்தம் உடலில் அதிக நீரிழப்பை ஏற்படுத்துகின்றது.மேலும் ஜிம் சென்று தொடர்ச்சியாக கடின உடற்பயிற்சியில் ஈடுப்படுவதனால் நிலைமை இன்னும் மோசமடைகின்றது.

நீரிழப்பினால் சிறுநீரகத்திற்குச் செல்லும் ரத்தஓட்டம் குறைந்து, அதனால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை அகற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது.

அதிகப்படியான புரோட்டீன் சார்ந்த டயட் மற்றும் நீரிழப்பு போன்றவை சிறுநீரகத்திற்கு அதிக சுமையை கொடுக்கின்றது. இதனால் நாளடைவில் சிறுநீரகத்தில் காயம் ஏற்படவும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.

குறிப்பிட்ட சில சப்ளிமெண்ட்ஸ்களில் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும் மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அது பற்றி அறியாமல் அதனை பயன்படுத்துவதும் சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கின்றது.

இதனால் இவ்வாறான சப்ளிமெண்ட்ஸ்களை பயன்படுத்தும் முன்னர் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *