அருவெறுப்பான மஞ்சள் பற்கள் முத்து போல் ஜொலிக்கனுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்

Yellow Teeth Home Remedies : மஞ்சள் நிற பற்கள் நமது அழகைக் கெடுப்பது மட்டுமல்லாமல், வாய் ஆரோக்கியத்திலும் பிரதிபலிக்கும். இதற்கு முக்கிய காரணம் பற்களை சரியாக சுத்தம் செய்யாததும், தவறான உணவுப் பழக்கங்களுமே. இதன் காரணமாக பற்களில் மஞ்சள் அடுக்கு ஏற்படுகிறது, இதை தன் டார்ட்டர் என்கிறோம். உண்மையில், இந்த மஞ்சள் அடுக்கானது வெள்ளை பற்களை மஞ்சள் நிறமாக்குகிறது. ஆரம்பத்தில் இந்த மஞ்சள் அடுக்கு பற்களில் இருக்கும், ஆனால் இதை நாம் சரியான நேரத்தில் சுத்தம் செய்யாவிட்டால், இது பற்களை மட்டுமில்லமால் ஈறுகளையும் சேதம் படுத்தும். மேலும் இதன் மூலம் பற்கள் பலவீனமடையத் தொடங்கும். அதுமட்டுமின்றி இந்த அழுக்கு நீண்ட நாட்கள் தேங்கி வந்தால், பையோரியா, கேவிட்டி, பற்களில் ரத்தக் கசிவு, ஈறுகளில் வலி மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை ஏற்படத் தொடங்கும்.
இந்நிலையில் உங்களின் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறத்தை நீக்க நீங்கள் பல் மருத்துவரிடம் சென்று அவற்றை சுத்தம் செய்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கும் பணம் செலவாகும். ஆனால் பற்களின் மஞ்சள் (Yellow Teeth) நிறத்தைப் போக்க உதவும் ஆயுர்வேத மூலிகை (Ayurvedic Tips) ஒன்றை உள்ளது அவற்றை செலவில்லாமல் நீங்கள் பயன்படுத்தலாம். அவற்றைப் பற்றி இப்போது தெரிந்துக்கொள்வோம்.
இயற்கையான முறையில் பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்க வீட்டு வைத்தியம்
கருவேலம் : கருவேலம் உங்கள் பற்களை வெண்மையாக்க உதவும். கருவேலமரம் (Vachellia nilotica) தமிழகத்தில் பயனுள்ள மற்றும் பாரம்பரியம் மிக்க மரங்களுக்கு ஒன்றாக கருதப்படுகிறது. ஆயுர்வேத கருவேலம் கிளைகளை டிஸ்போசபிள் டூத் பிரஷ்களாகப் பயன்படுத்தலாம். பற்களை வெண்மையாக்க உதவும் கருவேலமில் டானின் உள்ளது.
துளசி செடி : துளசி செடி இந்து மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த துளசி (Basil Leaves) உங்கள் பற்களை வெண்மையாக்க உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? பற்களை வெண்மையாக்க முதலில் இந்த துளசி இலைகளை உலர்த்தி, அவற்றை தூள் செய்து அதை வைத்து பல் துலக்குங்கள். இவை பற்களை வெள்ளையாக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இந்த துளசி பையோரியா (ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு) போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
எலுமிச்சை தோல்கள்: எலுமிச்சை தோல்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை பற்களின் வெளிப்புற அடுக்கில் இருக்கும் மஞ்சள் நிறத்தை போக்க உதவும். எலுமிச்சம்பழத்தின் தோலை எடுத்து அதன் உள் பகுதி சதையை பற்களில் 2 நிமிடம் தேய்த்து பின் கழுவவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வரவும்.