UPI-ல இதெல்லாம் பண்ண முடியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!

இப்போது எல்லாம் வெளியில போகும் போது ரொக்கமா பணம் எடுத்து கொண்டு போகனும்னு அவசியம் இல்லை. கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் இருந்தால் போதும், நாம நினைத்த நேரத்தில் நினைத்த பொருளை வாங்க முடியும்.

மீதி சில்லறை இல்லனு தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.யுபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமன்ட்ஸ் இண்டர்பேஸ் மூலமாக நேரடியாக வங்கி கணக்கில் இருந்து , நண்பருக்கோ, வியாபாரிக்கோ பணம் அனுப்ப முடிகிறது. இந்த நவீன தொழில்நுட்பத்தால் பணப் பரிமாற்றங்கள் மிக எளிதாகி இருக்கின்றன.

குறிப்பாக இந்தியா ஃபின்டெக் எனப்படும் நிதி பரிமாற்ற தொழில்நுட்ப வளர்ச்சியிலும், டிஜிட்டல் பரிமாற்ற கட்டமைப்பிலும் உலகிற்கே முன் உதாரணமாக மாறி வருகிறது.நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்றவற்றை பயன்படுத்துவது மிக எளிதாக உள்ளது. இத்தகைய யுபிஐ செயலிகளில் மேலும் பல சிறப்பு வசதிகள் உள்ளன.

அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.தானாகவே வாடகை, கரண்ட் பில் செலுத்தும்: வீட்டு வாடகை, கரண்ட் பில், ஓடிடி தளங்களுக்கான சந்தாக்கள், மாதாந்திர ரீசார்ஜூகள் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தும் யுபிஐ செயலியில் ஆட்டோ பே இ- மேன்டேட் முறையை பயன்படுத்தி தானியக்கமாக மாற்றலாம்.

அதாவது நீங்கள் இ-மேன்டேட் அனுமதி கொடுத்தால் மாதந்தோறும் தானாகவே வாடகை செலுத்துவது, பில் கட்டுவது போன்றவை நடைபெறும்.கிரெடிட் கார்டை யுபிஐ உடன் இணைக்க போறீங்களா?.. அப்ப கட்டாயம் இதை பாலோ பண்ணுங்க.

செலவை கண்காணிக்கலாம்: யுபிஐ செயலிகள் உங்கள் பணத்தை எதற்கெல்லாம் செலவு செய்தீர்கள் என்ற அறிக்கையையும் வழங்கும். அதாவது யுபிஐ செயலியில் நீங்கள் எதற்கெல்லாம் பணம் செலுத்தினீர்கள் என்பதை அடிப்படையாக கொண்டு செலவை கண்காணித்து அறிக்கை வழங்குவதால்.

நீங்கள் இதனை திறம்பட பயன்படுத்தி தேவையற்ற செலவுகளை குறைக்கலாம். உங்களின் அனைத்து பரிவர்த்தனைகளையும் ஒரே இடத்தில் கண்காணிக்கலாம்.யுபிஐ லைட்: யுபிஐ லைட் எனப்படும் சிறப்பம்சத்தை பயன்படுத்தி சிறிய தொகைகளுக்கு PIN போடாமல் பணம் செலுத்தலாம்.

ரூ.500 வரையிலான பணப் பரிமாற்றங்களுக்கு PIN எண்ணை போட வேண்டிய தேவையில்லை.வெளிநாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம்: பல்வேறு நாடுகள் இந்தியாவின் யுபிஐ பரிமாற்ற முறையை ஏற்றுக்கொண்டுள்ளன.

இலங்கை, பிரான்ஸ், சவுதி அரேபியா,பஹ்ரைன், சிங்கப்பூர், பூடான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் நீங்கள் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.யுபிஐ என்னுடைய வாழ்க்கைய மாற்றிவிட்டது.. ஆட்டோ டிரைவர் டிரெண்டிங் வீடியோ..!யுபிஐ மூலம் கடன் பெறலாம்:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *