விராட் கோலி நீங்களும் இப்படி செய்யலாமா? கோபத்தின் உச்சத்தில் பிசிசிஐ.. நடவடிக்கை பாய வாய்ப்பு

இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நட்சத்திர வீரர் விராட் கோலி பங்கேற்கவில்லை. முதலில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக விராட் கோலி அறிவித்த நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதனால் தான் விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்று ரசிகர்களும் சமாதானம் அடைந்தனர். இந்த நிலையில் விராட் கோலி தற்போது மார்ச் முதல் வாரத்தில் இந்தியா வந்து சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக விராட் கோலி அந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விராட் கோலி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் நேராக ஆர் சி பி பயிற்சி முகாமில் இணைந்து வரும் ஐபிஎல் தொடருக்காக பயிற்சியை ஆரம்பிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது பிசிசிஐ நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பல நட்சத்திர வீரர்கள் முழு உடல் தகுதியைப் பெற்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ ஏற்கனவே கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நட்சத்திர விராட் கோலி இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் ஐபிஎல் தொடருக்காக தயாராக திட்டமிட்டு இருப்பது ரசிகர்களையும் கவலை அடைய செய்திருக்கிறது.

இதனால் இந்திய அணியை விட ஐபிஎல் போட்டிகள் தான் முக்கியமாகி விட்டதா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விராட் கோலி மட்டும் அந்த தவறை செய்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க பிசிசிஐ தயங்காது என தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணிகளுக்கான போட்டிகளை விட ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வீரர்களை பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட போகிறார்கள் என்ற செய்தி வெளியானது.

தற்போது இந்த பட்டியலில் விராட் கோலியும் இணைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் விராட் கோலி ஏற்கனவே இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என்று பிசிசிஐ இடம் முன்னதாகவே தெரிவித்திருக்கிறார். டி20 உலக கோப்பை நடைபெற இருப்பதால் அதற்கு ஐபிஎல் தொடரை பயிற்சி களமாக விராட் கோலி போன்ற வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் மார்ச் 10ஆம் தேதி ஆர் சி பி பயிற்சி முகாமில் இணைந்து விராட் கோலி டி20க்கு தயாராக திட்டமிட்டு இருக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *