மக்காசோளத்தை வைத்து பணியாரம் செய்யலாமா..? ஹெல்தி ஸ்நாக்ஸ் ரெசிபி..!
இன்றைய கால சூழ்நிலைகளுக்கு உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியமாகியுள்ளது. பெரியவர்கள் முதல் உணவு நிபுணர்கள் வரை அனைவரும் இயற்கையான உணவுகளையே எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
நம் முன்னோர்கள் வயதான காலத்திலும் ஆரோக்கியத்தோடு வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவர்களது உணவு பழக்கம் தான். குறிப்பாக அவர்கள் சிறுவயதில் இருந்தே சாப்பிட்ட சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகளாகும்.
அதன்படி சிறுதானியங்களில் ஒன்றான சோளத்தில் இயற்கையாகவே நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது எளிதில் செரிமானம் ஆகிவிடும் தன்மை கொண்டது. அப்படிப்பட்ட சோளத்தை வைத்து எப்படி பணியாரம் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
- வெள்ளை சோளம் – 1/2 கிலோ
- பச்சரிசி – கால் கிலோ
- வெள்ளை உளுந்து – 100 கிராம்
- வெங்காயம் – 1 நறுக்கியது
- பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
- அரை இஞ்சி – நறுக்கியது
- வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1/2 ஸ்பூன்
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
முதலில் சோளத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த சோளத்தை பச்சரிசி, உளுந்து, வெந்தயத்துடன் சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
அனைத்தும் நன்கு உறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து பணியாரம் செய்யும் பதத்திற்கு ஏற்றார் போல் அரைத்துகொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
நன்றாக வதங்கியதும் இதை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து கிளறி விடவும்.
பிறகு மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பிறகு அடுப்பில் பணியாரம் செய்யும் சட்டியினை வைத்து சூடாக்கி எண்ணெய் தடவிக்கொள்ளவும்.
அதன் பிறகு அதில் ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு மாவினை ஊற்றி வேக வைக்கவும்.
பணியாரம் பொன்னிறமாக மாறும் வரை திருப்பிப்போட்டு வேகவிடவும்.
அவ்வளவு தான் சுவைமிகுந்த சோளப் பணியாரம் தயார்.