பாம்பின் விஷத்தை கூட முறிக்குமா குப்பைமேனி? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

இந்த நவீன காலத்தில் நாம் ஒரு சிறிய காய்ச்சலுக்கும் வைத்தியரை நாடி செல்கிறோம். ஆனால் நமது முன்னோர்கள் நமக்கு பல மூலிகைகளை விட்டுச்சென்றுள்ளனர்.

அதை தற்போது யாரும் அவ்வளவு பெரிதாக கண்டுகொள்வதில்லை. நமது கண்களுக்கு தெரியாமல் எவ்வளவோ நன்மை கொட்டிகிடக்கும் மூலிகைத்தாவரங்கள் நிறைவாக உள்ளன .

அந்த வகையில் மூலிகைகளில் ஒன்றான குப்பைமேனி மூலிகைத்தாவரம் நமக்கு என்னென்ன நன்மை தரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

குப்பைமேனி
இந்த குப்பைமேனி தாவரங்கள் பெரும்பாலும் குப்பையிலேயே வளரும். இதற்கு தண்ணீர் ஊற்றி பசளையிட்டு வளர்க்க வேண்ணடிய அவசியம் இல்லை.

இது மனித உடலில் இருக்கும் பல நோய்களுக்கு பலனை வள்ளள் போல் அள்ளி தருகிறது. உடலில் இருக்கும் வியர்க்குரு, அரிப்பு, படை, உள்ளிட்ட தோல் நோய்கள், கண்களில் வீக்கம், முகத்தில் வீக்கம், பூச்சுக்கடி உள்ளிட்டவைகளுக்கு இது சிறந்த நிவாரணியாகும்.

இதன் சாற்றை உப்புடன் கலந்து போட்டால் பலன் தரும். படர்தாமரை பிரச்சனை இருப்பவர்கள் இந்த குப்பைமேனி சாற்றுடன் உப்பு சேர்த்து அதற்கு மேல் பூசி வந்தால் படாதாமரை பிரச்சனை இருக்காது.

சளி காய்ந்து படிந்திருக்கும் பிரச்சனை இருந்தால் நீங்கள் இந்த இலையை பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்தால் சளியை இல்லாமல் செய்து மலத்துடன் வெளியேற்றும்.

வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்கு இந்த குப்பைமேனியை சாப்பிட்டு வர வேண்டும்.

கால் வலி மூட்டு வலி வயிறு வலி பிரச்சனை இருப்பவர்கள் குப்பை மேனி இலையின் சாற்றை நல்லெண்ணையோடு சேர்த்து காய்ச்சி எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அந்த இடத்தில் வெளிப்பூச்சாக தடவி வந்தால் வலி காணாமல் போய்விடும்.

இதில் இதை எல்லாத்தையும் விடவும் ஒரு பெரிய நன்மை ஒளிந்திருக்கிறது. பாம்பு கடிக்கு விஷ முறிவாக இது பயன்படுகிறது.

இதைத்தான் இருளர் கிராம மக்கள் தயாரித்து விஷத்தை முறித்து வருகிறார்கள். இந்த அருமையான மூலிகைச்செடியை நீங்கள் வீட்டில் வளர்க்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *