இப்படியெல்லாமா தங்கத்தை கடத்துவாங்க.. மும்பையில் சிக்கிய விமான பயணி வீடியோ..!!
துபாயிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பயணி தனது காலணியில் 240 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
மும்பை விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்த அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 3 நாட்களில் நடந்த இரண்டாவது சம்பவம் இது. மார்ச் 15, 16 தேதிகளில் ரூ.1.66 கோடி மதிப்புள்ள 2.66 கிலோ தங்கம் மற்றும் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதில் ஒரு பயணி தனது இயர் பாட் கேஸில் தங்கத்தை மறைந்து வைத்திருந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் மார்ச் 16, 17 ஆகிய தேதிகளில் ரூ.1.71 கோடி மதிப்புள்ள 2.78 கிலோ தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மங்களூரு சுங்க அதிகாரிகள் மார்ச் 20 ஆம் தேதியன்று ரூ.6.2 லட்சம் மதிப்புள்ள 96 கிராம் தங்கத்தை துபாயிலிருந்து வந்த பத்கலைச் சேர்ந்த ஒரு பயணியிடம் கைப்பற்றினர். அந்தப் பயணி தங்கத்தை உருக்கி பிரவுன் தாளில் மடித்து வைத்து கொண்டு வந்துள்ளார்.
அதை தனது டிராலி பேக்கில் மறைத்து கடத்தி வந்துள்ளார். முன்னதாக ஜனவரியில் குவைத்தில் இருந்து வந்த ஒரு பயணி வைத்திருந்த மயோனிஸ் பாட்டிலில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
வளைகுடா நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் வாயிலாக ஏராளமான தங்கம் கடத்தி வரப்படுவது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அறிந்து அதிகாரிகள் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் சட்டவிரோதமாக எலக்ட்ரானிக் பொருட்களும் கடத்தி வரப்படுகின்றனர். இதையும் அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தையும் எலக்ட்ரானிக் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.