கனடா: உயரிய அங்கீகாரத்தைப் பெறும் இந்திய தொழிலதிபர்!
இந்தியாவில் பிறந்த பிர்தெளஸ் கராஸ், கனடாவின் உயரிய பதவியான ‘ஆர்டர் ஆஃப் கனடா’ அதிகாரி பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மனிதநேயத்தை மையப்படுத்திய ஊடகச் செயல்பாட்டின் மூலம் சமூக மாற்றத்தை விதைத்தமைக்காக இவருக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
நாட்டின் உயரிய அங்கீகாரங்களில் ஆர்டர் ஆஃப் கனடா ஒன்று. மிகச் சிறப்பான மற்றும் நீடிக்கக் கூடிய பங்களிப்பு ஆற்றியவர்களை அங்கீகரிக்கும் விதத்தில் இந்தப் பதவி அளிக்கப்படுகிறது.
கனடாவில் கவர்னர் ஜெனரல் மேரி சைமன், கனடாவின் உயர்மட்ட அதிகார குழுவுக்கு, 15 அதிகாரிகள், ஒரு கெளரவ அதிகாரி மற்றும் 59 உறுப்பினர்களை நியமித்த அறிவிப்பை வெளியிட்டார்.
68 வயதான பிர்தெளஸ் கராஸ் இது குறித்து பேசும்போது, “இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் நெகிழ்ச்சியடைகிறேன். கனடாவுக்குக் குடியேறிய எனக்கு இந்தப் பதவி அர்த்தம் நிறைந்தது. கனடாவில் சிறியளவில் உள்ள பார்ஸி சமூகம் அதிகம் சாதிக்கக் கூடியதாக உள்ளது. இப்படி பார்க்கும்போது இன்னும் நிறைவளிப்பதாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பிலிப்பின்ஸ் போா் பயிற்சி: சீனா அதிருப்தி
அனிமேஷன் மற்றும் படங்கள் சார்ந்த தயாரிப்பாளரான பிர்தெளஸ் கராஸின் படைப்புகள், இந்தியா உள்பட 198 நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. 125-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பல்வேறு பல்கலைகழங்களின் கெளரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.