கனடாவுக்கு மாற்றாக சர்வதேச மாணவர்கள் கல்வி கற்க சாதகமான நாடுகள்…
கனடாவுடனான தூதரக உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவுக்குக் கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துவருகிறது.
இந்நிலையில், கனடாவுக்கு மாற்றாக, வேறு எந்தெந்த நாடுகளில் சர்வதேச மாணவர்கள் கல்வி கற்க சாதகமான சூழல் உள்ளது என பார்க்கலாம்.
அமெரிக்கா
2023ஆம் ஆண்டின் இறுதிக்காலாண்டில், கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ள அதே நேரத்தில், 2022 – 23 கல்வியாண்டில், அமெரிக்காவுக்குக் கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
2022 – 23 கல்வியாண்டில் அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்றுள்ள இந்திய மாணவ மாணவியரின் எண்ணிக்கை 268,923 ஆகும்.
அமெரிக்கா மட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகம், அவுஸ்திரேலியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் இந்திய மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற சூழலை வழங்குகின்றன.