குடும்பச் செலவை சமாளிக்க முடியலைன்னா.. Kellogg’s சாப்பிடுங்க, சிஇஓ பேச்சு..!!
கெல்லாக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கேரி பில்நிக் குடும்பத்தின் மளிகை சாமான்கள் செலவு அதிகரித்து வருவதால் காலை மட்டுமின்றி இரவு உணவுக்கு சீரியல் (Cereal) சாப்பிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார். அவரது இந்தக் கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கேரி பில்நிக், சீரியல் (Cereal) விலை குறைவாக இருப்பதால் கடைக்காரர்கள் அவற்றை வாங்கி விற்க வேண்டும்.
சீரியல் (Cereal) வகைகள் எப்போதும் மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. நுகர்வோர் குடும்பச் செலவினால் அழுத்தத்தில் இருக்கும்போது இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு குடும்பத்துக்கான சீரியல் (Cereal) விலை மிகவும் மலிவாக இருக்கும் என்றார்.
இதற்கு தொலைக்காட்சி நெறியாளர் கார்ல் குயின்டனிலா கேட்கையில், மக்களை இரண்டு நேரம் சீரியல் (Cereal) சாப்பிட சொல்வது தவறாக இருக்காத என கேட்ட போது, பில்நிக் பதில் கூறும்போது நிறைய வாய்ப்புகள் இருக்கும்போது சீரியல் (Cereal) சாப்பிட மக்களை ஊக்குவிப்பதில் என்ன தவறு இருக்கும் என்று கூறினார்.
மேலும் டின்னருக்கான சீரியல் சாப்பிடுவது இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது. பால் மற்றும் பழங்களுடன் கூடிய சீரியல் விலை $1 க்கு கீழ் உள்ளது. இந்தப் போக்கு தொடரும் என்றார். பில்னிக்கின் இந்தப் பேச்சு சமூக ஊடக பயனர்களை அதிருப்தியை உருவாக்கியதோடு கடுமையான எதிர்ப்பைத் தூண்டியது.
இதுபற்றி ஒரு யூசர் பதிவிட்ட கருத்தில், நெருக்கடியான காலங்களில் மக்களிடமிருந்து அதிக பணம் சம்பாதிக்க கெல்லாக்ஸ் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும். அவர்களின் சிஇஓ இரவு உணவிற்கு என்ன சாப்பிடுகிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? எந்த கவனமும் இல்லாமல் நாள் முழுவதும் விலை ஏற்றம் பற்றிதான் அவருக்குச் சிந்தனை இருக்கிறது. வெட்கம் அவமானம் என்று கூறியுள்ளார்.
மற்றொரு யூசர் கருத்து தெரிவிக்கையில், பணத்தை சேமிக்க குடும்பங்கள் இரவு உணவுக்கு தானியங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய உலகில் நாங்கள் வாழ்கிறோம். மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது யூசர் தனது பதிவில், பணக்காரர்கள் வறுமையைப் பயன்படுத்தி மார்க்கெட்டில் பிழைப்பது காட்டுத்தனமானது என்று கூறியுள்ளார்.
காலை, மதிய உணவு அல்லது இரவு உணவிக்கான தானியங்கள் வெறும் குப்பை ஆகும். உங்கள் சொந்த ஆரோக்கியத்துக்கான ஊட்டச்சத்து பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று ஒரு யூசர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ப்ரூட் லூப்கள், கார்ன் ஃப்ளேக்ஸ் மற்றும் பல தானியங்களுக்கு பிரபலமான கெல்லாக்ஸ், 2022 முதல் பிரேக்பாஸ்ட் ஃபார் டின்னர் என்ற போக்கை ஊக்குவித்து வருகிறது என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
வேளாண் துறையின் தரவுகளின்படி, அமெரிக்கர்கள் 2022 ஆம் ஆண்டில் உணவு வாங்குவதற்காக தங்கள் வருமானத்தில் 11.4 சதவீதத்தை செலவழித்துள்ளனர். இது 1999 க்குப் பிறகு இது அதிகமாக உள்ளது.