WPL கோப்பை வென்றதை நம்ப முடியல.. இது பெங்களூரு ரசிகர்களுக்கான வெற்றி.. ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி

மகளிர் பிரிமியர் லீக் கோப்பையை ஆர் சி பி அணி முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர் சி பி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

இது குறித்து பேசிய ஆர் சி பி மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தானா, இந்த வெற்றியை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த வெற்றியை உணர்வதற்கு எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் என நினைக்கின்றேன். ஏனென்றால் நான் மிகுந்த உற்சாக மிகுதியில் இருக்கின்றேன்.

என்னால் பேசவே முடியவில்லை. நான் எனது அணி வீராங்கனைகளை நினைத்து பெருமை கொள்கின்றேன். இந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் பல உச்சங்களையும் சரிவையும் கண்டிருக்கின்றோம். ஆனால் நாங்கள் ஒரே அணியாக ஒன்றிணைந்து இன்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறோம். நாங்கள் பெங்களூருவில் விளையாடிய போட்டிகள் மிகவும் நன்றாக அமைந்தது.

டெல்லியில் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினோம். எங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தை ஒரு கால் இறுதிப் போட்டியாகவும், எலிமினேட்டர் ஆட்டத்தை அரை இறுதியாகவும் இதை இறுதிப்போட்டியாகவும் நாங்கள் கருதி விளையாடினோம். இதுபோன்ற தொடர்களில் நீங்கள் சரியான நேரத்தில் ஒன்றிணைந்து விளையாட வேண்டும். கடந்த ஆண்டு ஆர் சி பி அணியின் கேப்டனாகவும் ஒரு வீராங்கனையாகவும் நிறைய பாடங்களை நான் கற்றுக் கொண்டேன்.

எங்கள் அணி நிர்வாகம் எப்போதுமே எனக்குத் துணையாக இருந்திருக்கிறது. அதற்காக நான் அவர்களை பாராட்டுகின்றேன். இந்த கோப்பையை தற்போது அவர்களுக்கு நாங்கள் கொடுத்திருப்பதை நினைத்து பெருமை கொள்கின்றேன். இந்த கோப்பையை நான் ஒரு தனி ஆளாக வாங்கவில்லை. ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து வென்றிருக்கிறது. ஆர் சி பி போன்ற ஒரு அணி கோப்பையை பல ஆண்டுகள் கழித்து முதல்முறையாக வென்றிருக்கிறது.

இது நிச்சயம் ஸ்பெஷலான வெற்றி. என் வாழ்நாளில் சிறந்து வெற்றிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஆர்சிபி அணிக்கு எப்போதுமே விசுவாசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். அவருடைய துணை இல்லாமல் எதுவுமே நிகழ்ந்திருக்காது. இந்த கோப்பை நமக்கு கிடைத்து விட்டது. ஈ சாலா கப் நம்தே என்று நான் சொல்ல ஆசைப்படுகிறேன் என்று ஸ்மிருதி மந்தானா கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *