பாசம் கிடைக்கல.. தாய் குறித்து தந்தை சொன்ன அதிர்ச்சி தகவல்.. ஷாக்கில் மகள்கள்!

நம்முடையதோ அல்லது நம் பெற்றோர்களுடைய வாழ்க்கை குறித்தோ சில ரகசியங்களை பிறர் வாயினால் கேட்கும் போது, அதன் அதிர்ச்சியை அவ்வுளவு எளிதில் தாங்கிக்கொள்ள முடியாது. இதுபோன்ற ஒரு ரகசியத்தை கேட்டு தான் இரண்டு சகோதரிகளும் தற்போது அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இத்தனை நாள் தங்கள் தம்பி என்று கூடவே இருந்தவர், தங்கள் தாய்க்கும் வேறொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவர் என்ற உண்மையை தெரிந்து விழிபதுங்கி போயுள்ளனர். மேலும் நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்களது பெற்றோர்கள் விவாகரத்து செய்த போது கூட இந்த உண்மை எதுவும் தங்களுக்கு தெரியாததை நினைத்து சகோதரிகள் இருவரும் இன்னும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

எங்கள் பெற்றோர்களுக்கு இடையே விவாகரத்து ஆனபோது, எங்கள் தாய் பித்துபிடித்தவர் போல் நடந்துகொண்டார். நாங்கள் இருவரும் அவளோடு தான் செல்ல வேண்டும் என்றும் அப்பாவை இனி பார்க்கவே கூடாது என்றும் பிடிவாதம் பிடித்தாள். இதனால் ஏற்பட்ட கோபத்தில், தாய் பற்றிய சில ரகசியங்களை அப்போதே எங்கள் தந்தை கூறினார். ஆனால் தங்கள் தாய் யாரோடு தொடர்பில் இருந்தார் என்ற விவரத்தை அவரால் முழுமையாக எங்களிடம் கூற முடியவில்லை என தங்களுக்கு நடந்த சம்பவங்கள் குறித்து Reddit தளத்தில் பகிர்ந்துள்ளார் அந்தப் பெண்.

இதற்கிடையில், சமீபத்தில் தங்களது தாயின் சிறு வயது நண்பருக்கு முதல் பேரக் குழந்தை பிறந்ததை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு சகோதரிகள் உள்பட அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் அங்கிருந்த நபர்களில் 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் தங்கள் தம்பியின் சாயலில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருடைய பெயர் டேவிட் என்பதை அப்போது அவர்கள் இருவரும் தெரிந்துகொண்டனர்.

தங்கள் தாய் ஏன் தங்கள் இருவரையும் ஒழுங்காக கவனிப்பதில்லை என்பதையும் தம்பியை மட்டும் அதிக பாசம் கொடுத்து வளர்த்த காரணத்தையும் அன்று இரு சகோதரிகளும் தெரிந்து கொண்டனர். இதுகுறித்து தங்கள் கவலைகளை தந்தையிடம் கூறியுள்ளனர். ஆனால் இந்த சங்கடமான உண்மையை அவர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. தங்கள் தம்பியின் உண்மையான தந்தை யாரென்று எங்களுக்கு தெரியும் என்று சகோதரிகள் கூறிய பிறகே, தாய் பற்றிய உண்மையை கூற ஆரம்பித்துள்ளார்.

டேவிட் என்ற நபரோடு மூன்று வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ள விவரத்தையும் அவர்களது தந்தை கூறினார். அந்த சமயத்தில் சகோதரிகள் இருவரும் சிறுமிகளாக இருந்துள்ளனர். ஆனால் இப்போது புதிய பிரச்சனை ஒன்று உருவெடுத்துள்ளது. இந்த உண்மையை தங்கள் தம்பிக்கு சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இரு சகோதரிகளும் உள்ளனர். ஆனால் தன் தம்பியோடு உள்ள உறவை முறித்துக்கொள்ள தங்களுக்கு விருப்பமில்லை என்பதையும் தனது பதிவில் உறுதியாகக் கூறியுள்ளார் அந்தப் பெண்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *