இனிமேலும் பொறுக்க முடியாது.. டெஸ்ட் போட்டி புறக்கணிப்பு? இந்தியாவுக்கு எதிராக பொங்கிய இங்கிலாந்து
ஹைதராபாத் : இங்கிலாந்து அணியை சேர்ந்த 20 வயது வீரர் சோயப் பஷீருக்கு இந்தியா விசா வழங்காததை அந்நாட்டு ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி உள்ளன.
இதை அடுத்து இங்கிலாந்து மக்கள் பலரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி புறக்கணிக்க வேண்டும் என குரலெழுப்பி வருகின்றனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. எப்போதும் சில வாரங்கள் முன்பே டெஸ்ட் தொடருக்கு இங்கிலாந்து அணி இந்த முறை 3 நாட்கள் முன்பு தான் இந்தியா வருவோம் என பிடிவாதமாக நின்று மூன்று நாட்கள் முன்பு இந்தியா வந்தது. இந்த நிலையில் அந்த அணியில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சோயப் பஷீர் என்ற இளம் வீரருக்கு இந்திய விசா கிடைக்கவில்லை.