ரூ.11.10 லட்சம் கோடியாக மூலதன செலவினம் உயர்வு
நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் மூலதன செலவினம் 10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகளில், இது, 9.40 லட்சம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள மூலதன செலவினம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு வித்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீடுகளை துாண்டுவதற்கும், வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், மத்திய அரசு தொடர்ந்து மூலதன செலவினத்துக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்நிலையில், வரும் 2024 – 25 நிதியாண்டில் மூலதன செலவினம் 11.10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.