பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் கேப்டன் மில்லர்; 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. பிரமாண்டமாக தயாரான இந்தப் படத்தில் தனுஷ் உடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பொங்கல் சிறப்பு படமாக நேற்று உலகெங்கும் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான மாஸ் திரைப்படம் இதுதான் என தனுஷ் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ‘கேப்டன் மில்லர்’ படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் தோன்றும் தனுஷ், தனது வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் இரண்டு நாட்கள் செய்த வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. படம் வெளியான இரண்டு நாட்களில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.