கேப்டன் மில்லர், அயலான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி . தமிழக அரசு.!!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள கேப்டன் மில்லர் மற்றும் அயலான் திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனைப் போலவே சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திற்கு வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை வழக்கமான காட்சிகளை விட இரண்டு காட்சிகள் கூடுதலாக திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.