கேப்டன் மில்லர் vs அயலான்… பாக்ஸ் ஆபீஸ் முந்தியது யார்

னுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தை ராக்கி, சாணிக் காகிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.
இதில் தனுசுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், குமரவேல், பிரியங்கா மோகன், ஜெயபிரகாஷ், ஜாஜ் கொக்கேன், நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். மரியாதையை எதிர்பார்க்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை பின்னணியில் கேப்டன் மில்லர் படத்தின் கதையை எழுதி படமாக்கியிருக்கிறார் இயக்குனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் நேற்று வெளியான நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படம் ரூ.14 முதல் 17 வசூலித்து பொங்கல் ரேஸில் முதல் இடத்தில் உள்ளது. இனி வரும் நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் கேப்டன் மில்லர் திரைப்படம் மேலும், வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அயலான் திரைப்படம் பல தடைகளை தாண்டி இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி உள்ளது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட படம் அயலான். ஏலியனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரகுல் ப்ரீத் சிங், பானுபிரியா, யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரோஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

… இந்த கொழு கொழு பையன் யாருனு தெரியுதா? இப்போது கோலிவுட்டின் பிரபல ஹீரோ இவர்!

சொந்த ஊரில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட சிவகார்த்திகேயன் சில காரணங்களால் சென்னை வருகிறார். அதேபோல் வில்லன் நோவா கேஸ் தயாரிக்க சக்தி வாய்ந்த பொருள் ஒன்றை பயன்படுத்துகிறார். அது பூமிக்கு மட்டுமில்லாமல் வேற்றுகிரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஏலியன் வருகிறது. இவர்கள் மூவரும் இணைக்கும் கதையே அயலான். அதன்படி, அயலான் முதல் நாளில் 10 முதல் 13 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனி வரும் நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் கேப்டன் மில்லர் திரைப்படம் மேலும், வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *