கேப் டவுனை கைப்பற்றியாச்சு..இன்னும் இந்தியா ஒரு டெஸ்ட் கூட வெல்லாத மைதானம் எவ்வளவு இருக்கு தெரியுமா?

கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அபார சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அதாவது கடந்த 32 ஆண்டுகளில் இந்திய அணி முதல் முறையாக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றிருக்கிறது.

இதுவரை இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடி தற்போது தான் முதல் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி 1932 ஆம் ஆண்டு முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இந்த 91 ஆண்டு காலத்தில் இந்திய அணி இன்னும் பல டெஸ்ட் மைதானங்களில் ஒரு போட்டியை கூட வெல்லாத நிலை இருக்கிறது.

அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.இந்திய அணி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வென்றதில்லை. Old Trafford மைதானத்தில் ஒன்பது போட்டிகளில் இந்தியா விளையாடி இருக்கிறது. இதில் பல போட்டிகளில் டிராவை கண்டாலும் ஒரு டெஸ்ட் கூட இன்னும் நாம் வென்றது இல்லை. இதேபோன்று வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படோஸ் மைதானத்தில் இந்தியா 9 போட்டிகளில் விளையாடி ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது இங்கு இந்தியா எட்டு டெஸ்டில் விளையாடி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பது பாகிஸ்தானில் உள்ள லாகூர் கடாபி மைதானம் தான். இங்கு இந்தியா ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை ஒரு போட்டியில் கூட வென்றது கிடையாது.

இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் இல் உள்ள கயானா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. ஆனால் இங்கு இன்னும் ஒரு வெற்றியை கூட இந்தியா பெற்றதில்லை. இதேபோன்று பாகிஸ்தானில் உள்ள கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி 6 டெஸ்டில் விளையாடி இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை. கேப்டவுனில் நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திய அணி வென்றது போல் இன்னும் இந்த ஆறு மைதானங்களில் இந்தியா விரைவில் முதல் டெஸ்ட் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *