கார் டிரைவர் குடுத்து வெச்சவரு! ஒடம்பு முழுசா மச்சம் இருந்தாதான் இந்த மாதிரி ஒரு பொண்ணை ஏத்தீட்டு போக முடியும்
தென் இந்திய திரையுலகில் மட்டுமல்லாது, பாலிவுட் (Bollywood) திரையுலகிலும் தற்போது வெற்றி கொடி நாட்டி கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவர் தற்போது எங்கு சென்றாலும், அது செய்தியாகி விடுகிறது. இந்த வரிசையில் மும்பை விமான நிலையத்தில் (Mumbai Airport) நடைபெற்ற ராஷ்மிகா மந்தனாவின் ஒரு நிகழ்வு செய்தியாக மாறியுள்ளது.
ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில், மிக பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றுள்ளது. அனிமல் திரைப்படத்தின் வெற்றி விழா (Animal Success Party) மும்பையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காகா ராஷ்மிகா மந்தனா மும்பை விமான நிலையம் வந்தார்.
அப்போது அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரில் ஏறுவதற்கு பதிலாக, வேறு ஒரு காரில் ஏற ராஷ்மிகா மந்தனா சென்று விட்டார். ஆனால் ராஷ்மினா மந்தனாவின் பாதுகாவலர்கள் எச்சரிக்கை செய்ததையடுத்து, ராஷ்மிகா மந்தனா சரியான காரில் ஏறினார். இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
தவறுதலாக வேறு ஒரு காரில் அமர சென்று விட்டாலும் கூட, ராஷ்மிகா மந்தனாவிடம் நிறைய சொகுசு கார்கள் சொந்தமாக இருக்கின்றன என்பது இங்கே நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். அதிகம் சம்பாதிக்கும் பிரபலமான நடிகையாக இருப்பதால், சொகுசு கார்களை வாங்குவது என்பது அவருக்கு மிகவும் எளிமையான ஒரு விஷயமாக உள்ளது.
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport), ஆடி க்யூ3 (Audi Q3), ஹூண்டாய் சாண்டா ஃபே (Hyundai Santa Fe) என ஏராளமான கார்களை ராஷ்மிகா மந்தனா வைத்துள்ளார். இதில், ஆடி க்யூ3 கார்தான், ராஷ்மிகா மந்தனாவின் முதல் சொகுசு கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
View this post on Instagram
கடந்த 2018ம் ஆண்டு இந்த கார் வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஷ்மிகா மந்தனாவின் ஆடி க்யூ3 காரில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 188 பிஎஸ் பவர் மற்றும் 380 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி க்யூ3 காரின் ஆரம்ப விலை 43.81 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 53.17 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.