கார் லவ்வர், சொகுசு பங்களா.. ஆடம்பர வாழ்க்கை வாழும் சஞ்சு சாம்சன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

9 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க சஞ்சு சாம்சன் போராடி வருகிறார். ஆனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபார சதம் விளாசி சஞ்சு சாம்சன் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதனால் அடுத்தடுத்து இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டு வருவதே அவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக மாறியுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு அயர்லாந்தில் கூட அதிகளவில் ரசிகர்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சஞ்சு சாம்சனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளி வந்துள்ளது.

அந்த வகையில் சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ தரப்பில் எந்த ஒப்பந்தமும் அளிக்கப்படவில்லை. இதனால் விளையாடும் போட்டிக்கான ஊதியத்தை மட்டுமே சஞ்சு சாம்சன் பெற்று வருகிறார். அதன்படி பார்த்தோம் என்றால், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் ஊதியமாக பெற்று வருகிறார். அதேபோல் 2012ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் சஞ்சு சாம்சன் ரூ.8 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.

ஆனால் தற்போது ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரூ.14 கோடி ஊதியம் பெற்று வருகிறார். தற்போது வரை ஐபிஎல் தொடர் மூலமாக மட்டுமே ரூ.76 கோடி வருவாய் எட்டியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் கூக்குபுரா விளையாட்டு நிறுவனம் சஞ்சு சாம்சனை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கேரளாவை சேர்த வெல்னெஸ், ஹீல் உள்ளிட்ட நிறுவனங்களும் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கில்லட் ஷேவ் ஜெல், பாரத் பே செயலி, ஃபேன்டஸி கிரிக்கெட் செயலி என்று பல்வேறு நிறுவனங்களுக்கும் விளம்பர தூதராக சஞ்சு சாம்சன் செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு விளம்பர ஒப்பந்தத்திற்கு சஞ்சு சாம்சன் ரூ.25 லட்சம் ஊதியமாக நிர்ணயித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் கிரிக்கெட் மூலமாக வரும் வருவாயை, நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

இதனால் எதிர்காலத்திலும் சஞ்சு சாம்சனின் வருவாய் அதிகரிக்கும். அதேபோல் பெங்களூரு, மும்பை, ஐதராபாத் மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களிலும் பிரம்மாண்ட வீட்டினை கட்டியுள்ளார் சஞ்சு சாம்சன். ஒவ்வொரு வீடும் ரூ.4 கோடி வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, சஞ்சு சாம்சன் மிகப்பெரிய கார் லவ்வர் என்று அறியப்படுகிறது.

ரூ. 66 லட்சம் மதிப்பிலான அவ்டி ஏ6, ரூ.65 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ரூ.1.64 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ஸ், ரூ.60 லட்சம் மதிப்பிலான மெர்சிடஸ் பென்ஸ் சி ஆகிய சொகுசு கார்களை வைத்துள்ளார். அதேபோல் உள்ளூரில் பயணிக்க சில சாதாரண கார்களையும் சஞ்சு சாம்சன் வைத்துள்ளார். இதனால் சஞ்சு சாம்சனின் சொத்து மதிப்பு ரூ.82 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *