பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தின் மீது வழக்கு: நிராகரிக்கப்பட்ட பாலஸ்தீன அகதியின் வேண்டுகோள்
விசா வழங்க மறுத்ததை தொடர்ந்து காசா குடும்பம் ஒன்று பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் மீது வழக்கு
காசாவில் உள்ள தன்னுடைய குடும்பத்திற்கு விசா வழங்க மறுத்த பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகத்தின் மீது பாலஸ்தீன அகதி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கைரேகை வழங்காமல் தன்னுடைய மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு விசா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்த பாலஸ்தீன அகதியின் கோரிக்கையை உள்துறை அமைச்சகம் நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், காசாவில் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பால் தெரிவிக்கப்பட்ட hepatitis A நோய்த்தொற்று பாதிப்பு, விசா கோரி விண்ணப்பித்து இருந்த நபரின் குடும்பத்தில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் பதில்
தனிப்பட்ட வழக்குகள் தொடர்பான விவரங்களில் கருத்து கூற முடியாது என பிபிசி-யிடம் உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
ஆனால் அனைத்து விண்ணப்பங்களும் அவர்களது தனிப்பட்ட தகுதிகள் அடிப்படையில் கவனமாக பரிசீலிக்கப்படுகின்றன.
மேலும் விண்ணப்பங்கள் குடியேற்ற விதிகள் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.