Cashew Curry: பத்தே நிமிடத்தில் முந்திரி பருப்பு மசாலா கிரேவி

முந்திரி பருப்பு என்றால் பொதுவாக நாம் ஸ்வீட் செய்வதற்கு கொஞ்சம் தூவுவதற்காக பயன்படுத்துவோம்.

செய்யும் உணவுடன் இதை சேர்ப்பதால் அதன் சுவை கூடும் என்பதற்காக இந்த முந்திரி பருப்பை பயன்படுத்தகிறார்கள்.

இதில் கூடுதலான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இன்று உங்களுக்காக நாங்கள் தரப்போகும் ரெசிபி முந்திரி பருப்பு மசாலா கிரேவி இது சாப்பிடுவதற்கு சுவையாகவும் உடலுக்கு நிறைவான சத்தையும் தரக்கூடியது.

இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள
எண்ணெய் -2 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு – 200 கிராம்
சீரகம் – 1 தேக்கரண்டி
பட்டை – கொஞ்சம்
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
வெங்காயம் – 1
தக்காளி – 3
அரைத்த மசாலா விழுது
கரம் மசாலாதூள்- 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
சக்கரை – 1 தேக்கரண்டி
தண்ணீர் – அரை கப்
கசூரி மேத்தி
கொத்தமல்லி இலை
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும். பின்னர் அதில் தக்காளியை கீறி சூடாகிய தண்ணீரி்ல் போடவும்.

இதனுடன் எடுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பை சேர்க்க வேண்டும். பின்னர் அது இரண்டையும் எடுத்த ஆற விட வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை நன்றாக பொன்நிறம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.

பின்னர் அவித்த தக்காளியின் தோலை நீக்கி அதை துண்டகளாக வெட்டி வைக்க வேண்டும். இதற்கு பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அது சூடாகியதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

இதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் பொடியாய் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அவித்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு, மற்றும் தக்காளியை சேர்க்க வேண்டும். இதற்கு பின்னர் உப்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தனியாதூள் ,சீரகத்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

இது நன்றாக வதங்கியதும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்றாக ஒரு நிமிடம் வேக வைக்க வேண்டும்.

இந்த வேகவைத்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விட வேண்டும். பின்னர் ஆறவிட்ட கலவையை எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பட்டை ,சீரகம், கராம்பு ,வெங்காயம் ,ஏலக்காய் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

இதில் வெங்காயம் பொன்னிறத்தில் மாறியதும் அரைத்து வைத்த மசாலாவை சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின்னர் மிளகாய்தூள், கரம் மசாலா, உப்பு, மற்றும் சக்கரை சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கடைசியாக கசூரி மேத்தி மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

பின்னர் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இப்போது முந்திரி பருப்பு மசாலா கிரேவி தயார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *