CEAT நிறுவன உயர் பதவியை ராஜினாமா செய்த அனந்த் கோயங்கா.. இப்போ என்ன செய்கிறார்..?
ஆர்பிஜி எண்டர்பிரைசிஸின் முக்கிய நிறுவனமான CEAT லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ பதவிகளை அனந்த் கோயங்கா 2023 மார்ச்சில் ராஜினாமா செய்துவிட்டு இப்போது இந்த டயர் உற்பத்தி நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியில் உள்ளார்.சிஇஓ பதவியை ராஜினாமா செய்தது பற்றி அனந்த் கூறுகையில் சியாட் நிறுவனத்தை தாண்டி மொத்த குழுமம் அடிப்படையிலான செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதற்காக அப்படி செய்ததாகக் கூறினார்.
இருப்பினும் அவர் CEAT லிமிடெட்டின் போர்டு மெம்பராகத் தொடர்வதாக தெரிவித்தார். அனந்த் கோயங்காவை நான்-எக்ஸிகியூட்டிவ் நான் இண்டிபென்டன்ட் டைரக்டராகவும் துணைத் தலைவராகவும் நியமிக்க கம்பெனியின் போர்டு 2023 ஏப்ரல் 1 ஆம் தேதி ஒப்புதல் தந்தது.ஆர்பிஜி குரூப் தலைவர் ஹர்ஷ் கோயங்காவின் மகன் அனந்த் கோயங்கா. ரூ.33,000 கோடி மதிப்புள்ள ஆர்பிஜி குரூப்பின் வாரிசான அவர் நிறுவனத்தில் புதிய நல்ல மாற்றங்களை கடந்த 10 ஆண்டுகளில் செய்து வந்தார். அதன் மூலம் நிறுவனம் கூடுதலாக ரூ.370 முதல் ரூ.5800 கோடி வரை வருமானம் பார்த்தது.தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அனந்த் கோயங்கா ஃபிட்னெஸ்ஸுக்கும், சுற்றுலாவுக்கும் முக்கியம் தந்து வருகிறார். ஸ்குவாஷ் விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட்டில் எம்பிஏ முடித்தார்.பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் படித்தார்.CEATடுக்கு முன்பாக கேஇசி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் முக்கியப் பதவியை வகித்தார்.இதுதவிர மல்டி நேஷனல் நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், அக்சென்சர், மோர்கன் ஸ்டான்லியிலும் அனந்த் கோயங்கா பணியாற்றியுள்ளார். 2013இல் ஆட்டோமோட்டிவ் டயர் மேனுபேக்சரர்கள் அசோசியனின் தலைவராகவும் இருந்துள்ளார்.RPG குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் CEATடை சிறந்த செயல்திறனை நோக்கி செலுத்திய அனந்தின் விரிவான அனுபவம், ஆர்பிஜி குழுமத்தின் அடுத்த வளர்ச்சி அலையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.இந்த சகாப்தம் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் வரையறுக்கப்படுகிறது. தொழில்நுட்பங்கள், சந்தைகள் மற்றும் நுகர்வோருக்கு ஏற்ப நாம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான திறன்கள் மற்றும் வணிக உள்ளுணர்வுகள் அனந்திடம் இருப்பதாக நான் நம்புகிறேன் என்றார்.